2009

Thursday, December 3, 2009

சிங்களர் சிதறுவர்



ஐரோப்பியர்கள் அமெரிக்கக் கண்டத்தை அறிந்தபின், அதைக் கைப்பற்ற, அங்கு வாழ்ந்த தொல்குடிமக்களை என்னென்ன கொடுமைகள் செய்து அழித்தார்களோ, அதைவிடப் பன்மடங்குக் கொடுமைகள் செய்து ஈழத்தமிழர்களை அழித்து ஈழ மண்ணைக் கைப்பற்றி வருகிறார்கள் சிங்களர்கள்.தமிழினத்தின் தாயகத்தை வன்கவர்தல் செய்ய சிங்கள இனம் நடத்திய போரில் அந்த இனம் இப்பொழுது வெற்றியடைந்துள்ளது.

அந்த வெற்றியை நிரந்தரமாக்கிக் கொள்ள,தமிழினத்தின் மக்கள் தொகையைப் பெருமளவில் குறைப்பது, தமிழர் தாயகப் பகுதிகளை சிங்களர்களிடம் ஒப்படைப்பது என்ற நிகழ்ச்சிநிரல் தீட்டிச் செயல்படுகிறது இலங்கை அரசு.இதற்கான வேலைத்திட்டம் பீக்கான் திட்டம் என்ற பெயரில் 2005 - ஆம் ஆண்டு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் 20 நாட்டுப் பேராளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீட்டப்பட்டது. அது 2011 - வரைக்கான வேலைத்திட்டம். 2009 மே மாதத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்துவிட்டதாக சிங்கள அரசு அறிவித்தாலும் பீக்கான் திட்டப்படி “துடைத்தழிக்கும்” வேலைத்திட்டம் இப்பொழுது தொடர்கிறது. அது 2011 வரை செயல்படும். பீக்கான் திட்டப்படி போர்க்காலம் 2006 முதல் 2009 வ¬ர் ஈழத்தமிழரைத் துடைத்தழிக்கும் நடவடிக்கைக் காலம் 2009 -2011.]ஈழத்தில் எவ்வளவு மனித உரிமை பறிப்பு நடந்தாலும் உலகம் அதிராது. காரணம் உலகக் கருத்தினை உருவாக்கும் முகாமையான நாடுகள் பல பீக்கான் திட்டம் வரையப்பட்டபோது அதில் பங்கெடுத்தவை. அப்படியே இலங்கையின் மனித உரிமைப்பறிப்பை எதிர்த்தாலும், அது வலிக்காமல் கடிப்பதாகவே இருக்கும். அல்லது இலங்கை மீது ஆதிக்கம் செலுத்துவதில், பீக்கான் திட்ட நாடுகளுக்குள் உள்ள போட்டி, அது தொடர்பாக இலங்கை அரசு மீது ஏற்படும் எரிச்சல் ஆகியவை காரணமாக வரம்புக்குட்பட்டதாக இருக்கும்.அண்மையில் சிங்களப் படையாட்கள் தமிழ் இளைஞர்கள் 9 பேரை எப்படிச் சுட்டுக் கொல்கிறார்கள் என்ற காணொளிப்படத்தை பிரிட்டன் 4-ஆம் அலைவரிசைத் தொலைக்காட்சி காட்டியது. அது 25.08.2009 அன்று இணைய தளங்களில் வெளியிடப்பட்டது.அக்காட்சியைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. அக்காட்சி தாங்கமுடியா மனவலியையும், சொல்லொணா மானக்கேட்டையும் நமக்குத் தருகிறது. கடந்த சனவரி மாதம் சிங்களப்படை தமிழ் இளைஞர்களைப் பிடித்திருக்கிறது. அவர்கள் விடுதலைப் புலிகளா, இல்லையா என்ற வேறுபாடு சிங்களப்படைக்கு எப்போதுமே இருந்ததில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளே!பிடிபட்ட இளைஞர்களை என்னென்ன வகைகளில் சித்திரவதை செய்திருப்பார்கள் என்பதை அவர்கள் சுட்டுக்கொன்ற முறை நம்மை ஊகிக்கவைக்கிறது. முழு அம்மணமாக்கி, முதுகுப்பக்கம் இழுத்துக் கைகளைக் கட்டி, பூட்ஸ் காலால் உதைத்து, ஒரு பொட்டல் வெளியில் உட்காரவைத்து, சிங்களத்தில் இழிசொற்கள் பேசி, அவர்களின் முதுகுக்குப் பின்னாலிருந்து எந்திரத்துப்பாக்கியால் சுடுகிறார்கள். ஒன்பது முறை துப்பாக்கி ஓசை கேட்கிறது. ஒவ்வொரு ஓசையின்போதும் ஒரு தமிழ் இளைஞன் பின்புறமாகச் சாளிணிகிறான்; அந்தப் பொட்டல் வெளியில் பிணங்கள் இறைந்து கிடக்கின்றன. இதுதான் காணொளிக்காட்சி.இந்தக் காட்சியை வெளியிட்டது இலண்டன் தொலைக்காட்சி. இருந்தும் உலகம் அதிரவில்லை. நாடுகளின் நாக்குகள் ஊமையாகிவிட்டன. ஏன்? அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரை, எதிர்த்துப் போராடிய ஈராக்கியர்களை அமெரிக்கப்படை சிறைப்பிடித்து அபுகிரைப் சிறையில் அடைத்தது. அமெரிக்கப் பெண் காவலர் ஒருவர், ஒரு கைதியை நிர்வாணமாக்கி சங்கிலி போட்டு இழுத்துச் செல்வதும், அடிப்பதும் படமெடுக்கப்பட்டு வெளிவந்தது. நாகரிக உலகம் அதிர்ந்தது. மனித உரிமைக்குரல் ஓங்கி ஒலித்தது. நிலக்கோளமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களும், அந்தக்காட்டு மிராண்டித்தனத்தைக் கண்டித்தனர்.ஆனால் சிங்கள ஆக்கிரமிப்புப் படை தமிழ் இளைஞர்களை சட்ட நெறிகளுக்குப் புறம்பாக இவ்வளவு கேவலமாக இழிவுப்படுத்தி, சுட்டுக்கொல்வதை அபுகிரைப் சிறைக்கொடுமை அளவுக்கு உலகம் கண்டிக்காதது ஏன்?ஆக்கிரமிக்கப்பட்டபோதும் கூட ஈராக்கைத் தனிநாடாக அமெரிக்கா அங்கீகரித்தது. ஈராக்கியர்களைக் கொண்ட ஒரு பொம்மை அரசை நிறுவிக்கொண்டது. அரபுகளுக்கு நாடுகள் பல இருக்கின்றன. அவற்றிலிருந்து கண்டனக்குரல் எழுகிறது. அவற்றோடு உறவுவைத்துள்ள மற்ற நாடுகள் கண்டனக்குரல் எழுப்புகின்றன. இந்தப் பின்னணியில் மனித உரிமை அமைப்புகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.பத்துக்கோடித் தமிழர்கள் உலகில் வாழ்ந்தும் நமக்கொரு நாடில்லை; ஓர் அரசு இல்லை. தமிழினத்தின் தலைமைத் தாயகமாக உள்ள தமிழ்நாடோ இந்தியாவில் காலனியாக இருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் 450 பேரை நமது கடற்பரப்பில் வந்து சிங்களப்படை அவ்வப்போது சுட்டுக்கொன்ற போதும் உலகம் இந்த மனித அவலத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. காரணம் நாம் அடிமை, நமக்கொரு நாடில்லை. தமிழக எல்லைதாண்டி நமது கூக்குரல் வெளியே கேட்காது.சிங்கள அரசு ஈழத்தில் வைத்துள்ள அகதி முகாம்களில் 3 லட்சம் தமிழ் மக்கள் இருப்பதாகச் சொன்னார்கள். இப்பொழுது 2,80,000 பேர் இருப்பதாகச் சொல்கிறார்கள்; எஞ்சியோர் என்ன ஆனார்கள்? எப்படிச் செத்தார்கள்? ஐ.நா. மன்றமோ, உலக நாடுகளோ இதுபற்றி கேட்கின்றனவா? இந்த மனித உரிமைச்சிக்கலில் இவை தலையிடுகின்றனவா? இல்லை.சிங்களவெறி அரசு, கேள்வி கேட்பாரற்று, உலகச் சட்ட நெறிகளுக்கும் நீதிமுறைகளுக்கும் புறம்பாக மனிதக் கொலைகளையும், மனித உரிமைப்பறிப்புகளையும் அன்றாடம் கட்டவிழ்த்து விடுகிறது. வதை முகாம்கள் குறித்து வரும் செளிணிதிகள், நெஞ்சத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றன. சிங்களர்களிலும் மிகச் சிலராக மனித நேயர்கள் உள்ளனர்; அவர்கள் உயர்ந்த பீடங்களிலும் இருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு இழைக்கும் கொடுமைகளைப் பார்த்து, அவர்களும் கவலைப்படுகிறார்கள் ஒன்றும் செளிணியமுடியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள்.அந்நாட்டின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் என் சில்வா தம் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் 2009 சூன் மாதம் ஈழத்தமிழர் வதை முகாம்களைப் போளிணிப்பார்த்து விட்டுக் கண்ணீர் அறிக்கை வெளியிட்டார். “அந்த முகாம்களில் உள்ள கொடுமைகளை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவ்வளவு கொடுமை. இலங்கையில் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனம் என்று இரு இனங்கள் கிடையாது. ஒரே இனம் தான் இருக்கிறது என்று கூறுவது பச்சைப் பொய்” என்று குறிப்பிட்டார். இலங்கையில் ஒரே இனம்தான் இருக்கிறது, பெரும்பான்மை சிறுபான்மை இனம் கிடையாது. எல்லோரும் இலங்கைக் குடிமக்கள் என்று ராசபட்சே பேசியதில் உள்ள மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் நீதிபதி இவ்வாறு கூறினார். முகாமில் நடப்பது இன ஒடுக்குமுறைதான் என்பதை உறுதிப்படுத்தினார்.கடந்த 13.08.2009 அன்று மதுரை, வந்த இலங்கை மனித உரிமைப் போராளியும் சிங்கள இனத்தவருமான திரு நிமல்கா பெர்ணாண்டோ அம்மையார் நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்குக் கொடுத்த செவ்வியில் கூறியவை, கூரீட்டியாக நெஞ்சைக் குத்துகின்றது. “மனித நாகரிகம் அங்கு கிழிக்கப்பட்டுள்ளது. இளம்பெண்கள், அவர்களின் குடும்பத்தார் அல்லாத வேறு ஆண்களுடன் கூடாரங்களில் தங்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு கூறுவது இலங்கையின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) சித்த ரஞ்சன் டி சில்வா.
“மக்கள் திரள் மீது குண்டுபோட்டு பலரைக் கொன்று மற்றவர்களை அடைக்கலமுகாம் நோக்கி வலுவந்தமாக விரட்டி வந்தது இலங்கைப் படை. அப்படி வந்தவர்கள் அப்போது போட்டிருந்த அதே உடைகளைத் தான் இப்போதும் போட்டுக்கொண்டுள்ளார்கள். மாற்றுத் துணி கிடையாது. பற்பசையும் பிரசும் கூட அவர்களுக்கு அரிய பொருட்களாகிவிட்டன. தஞ்சமடைந்த மக்களை அகதிகளாக நடத்தவில்லை.
போர்க் குற்றவாளிகளாகவும் நடத்துகிறார்கள். மக்களின் கதியே இது வென்றால் அங்கு கொண்டுவரப்பட்ட போராளிகளின் கதியைக் கற்பனை செளிணிது பார்க்கவேண்டும்.”“அந்த மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பாமல் அடைத்து வைத்திருப்பதற்கு கேலிக்குரிய காரணமொன்றைச் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகள் நிலத்தில் வெடிக்காத கண்ணி வெடிகள், அதே பாதையில் திரும்பிப் போகும்போது மட்டும் வெடிக்குமா?” - நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் 14.08.2009.இவையெல்லாம் சிங்கள நாட்டின் மனித உரிமைப் போராளி நிமல்கா அம்மையார் கூறியவை. ஆனால் ஆரியச் செல்வன் இந்து என். ராம் திராவிடவேள் முதலமைச்சர் கருணாநிதியும் இலங்கையில் சுமுக நிலை திரும்பிவிட்டது என்று கூறுகிறார்கள். மேலைநாட்டு மனித உரிமை அமைப்புகளைக் கூட அனுமதிக்காத ராசபட்சே இந்து என். ராமை வதைமுகாம்களைப் பார்க்க அனுமதித்தார். அவர் தமது ஏட்டில் இந்த வதை முகாம்களில் எல்லா வசதிகளும் இருப்பதாகவும் தமிழ் நாட்டு அகதிமுகாம்களை விட மேலான தன்மையில் அவை நடத்தப்படுவதாகவும் எழுதினார்.சென்னையில் சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி இலங்கையில் “எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்ட பின் தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் சிலர் அப்பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.இந்த வதைமுகாம்களில் இளைஞர்களை விசாரணைக்கென்று அழைத்துச்சென்று சுட்டுக் கொல்கிறார்கள். மருந்தும் மருத்துவ சிகிச்சையும் இன்றி அன்றாடம் பலர் சாகிறார்கள்.
காலில் செருப்பணிய அனுமதிப்பதில்லை. தமிழ் மக்கள் காகித அட்டைகளையும், பிளாஸ்டிக் தாள்களையும் காலில் செருப்பாக கற்றிக்கொண்டு நடமாடுகிறார்கள். காலரா, பொக்குளிப்பான் போன்ற தொற்று நோளிணிகளும் மஞ்சள்காமாலை போன்ற கொடிய நோளிணிகளும் மக்களையும் குறிப்பாக குழந்தைகளையும் தாக்கி அன்றாடம் பலர் சாகிறார்கள். அந்த வதைமுகாம்களில் ஆண்களும் பெண்களும் திறந்தவெளி யில்தான் குளிக்க வேண்டும். பெண்கள் சேலைகளைக் கட்டி மறைவை உண்டாக்கிக் கொண்டால் அந்த சேலைகளை அகற்றிவிடுகிறார்கள் சிங்களப் படையாட்கள். இளம் பெண்கள் திறந்த வெளியில் குளிக்கும்போது அவர்களைக் காமக்கண்கொண்டு பார்கிறார்கள் அவர்கள் இதனால் பல பெண்கள் குளிப்பதில்லை. அந்தக் காவல் படையாட்கள் உணவருந்தப் போகும் வேளை பார்த்து பெண்கள் குளிக்கிறார்கள்.போராளிகளுக்கான முகாம் என்ற இடத்தில் 9000 இளைஞர்களையும் 2000 இளம் பெண்களையும் வைத்துள்ளார்கள். அனைவரும் விடுதலைப்புலிகள் என்ற கணக்கில் வைத்து, இவர்களை மிக மோசமாக நடத்துகிறார்கள்.இலங்கையில் எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது என்று கூறும் கருணாநிதி தமிழ்நாட்டிலிருந்து மனித உரிமைப் போராளிகள் குழு ஒன்றை அந்த முகாம்களைப் பார்வையிட்டு வர ஏற்பாடு செளிணிய வேண்டும். இந்த மனித வதை அனைத்திற்கும் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இலங்கைக்குத் துணை நிற்கின்றன. இந்தியா தனது படையை ஈழத்திற்கு அனுப்பியுள்ளது. கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக என்ற போர்வையில் படை அனுப்பியுள்ளது.முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் ஊர்களில் 500 சிங்களக் குடும்பங்களை இலங்கை அரசு குடியமர்த்தியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாளிணி உதவித்தொகையும் அரசு தந்துள்ளது. இதுபோல் உதவிகளைப் பெற்றுக்கொண்டு ஈழ மண்ணில் குடியேற வருமாறு சிங்களர்களை இலங்கை அரசு அழைக்கிறது. அப்படிக் குடியேறும் சிங்களர்கள் தமிழர்களின் நிலங்களை எத்தனை ஏக்கர் வேண்டுமானாலும் வளைத்து வேளாண்மை செய்யலாம்.வேளாண் தொழில்நுட்ப வல்லுனர்களை இந்தியா அனுப்பிவைக்கிறது. முகாம்களில் உள்ள ஆண்களும் பெண்களும் அந்நிலங்களில் கூலி வேலை செளிணிய அனுமதிக்கப் படுவார்கள். தங்கள் சொந்த நிலத்தில் சிங்களனுக்குக் கூலியாட்களாகத் தமிழ்மக்கள்!இவ்வாறு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் புதிய வேளாண் பண்ணைகள் சிங்களர்களால் உருவாக்கப்படுகின்றன. வேளாண் பண்ணை அமைக்கத் தமிழ்நாட்டிலிருந்தும் சிலரை இலங்கை அரசு அனுமதித்து உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. ஈழக்கடல் பகுதியில் பரம்பரையாக மீன்பிடிக்கும் தமிழர்களை அனுமதிக்காமல் சிங்கள மீனவர்களை அனுமதிக்கிறார்கள்.அவர்களுக்கு 1200 மீன் பிடிப்படகுகளை இலவசமாக இலங்கை அரசு வழங்கியுள்ளது. இந்தியா உட்பட வெளிநாடுகள் ஈழத்தமிழ் அகதிகள் மேம்பாட்டுக்காக என்று கொடுக்கும் நிதி இந்தவகையில் தான் செலவழிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன உணர்ச்சி வளர்ந்து வருவதை மடைமாற்றவும் முறியடிக்கவும் இருவகை உத்திகளை இந்தியா வகுத்துள்ளது.ஒன்று விடுதலைப்புலிகள் ஆதரவு, தமிழின உணர்ச்சி ஆகியவற்றைக் கொண்டுள்ள அமைப்புகளிடையே பிளவுகளை உண்டாக்குவது. இன உணர்ச்சியைத் தேர்தல் அரசியலுடன் இணைத்து விடுவது இதே நோக்கில் புதிய குழுக்கள் பலவற்றை உருவாக்குவது.இரண்டாவது வெளிமாநிலத் தவர்களைப் பெருவாரியாகத் தமிழகத்தின் கல்வி, வேலை, தொழில், வணிகம் ஆகியவற்றில் திணித்து தமிழ்நாட்டுக் குடிமக்களாக அவர்களை மாற்றி விடுவது. தமிழக மக்கள் தொகையில் இப்பொழுது சற்றொப்ப தமிழர்கள் 85 விழுக்காடு உள்ளனர். இந்த விகிதத்தை 50 விழுக்காடு தமிழர்கள் 50 விழுக்காடு வெளியார் என்று மாற்றி கலப்பின மாநிலமாக தமிழ் நாட்டை ஆக்குவது. இந்த இருபெரும் உத்திகளை இப்போதைக்கு வகுத்துள்ளார்கள்.அடுத்து தமிழின உணர்வு அமைப்புகள் மீது கைது உள்ளிட்ட அடக்குமுறைகளை ஏவிவிடுவது. தமிழின உணர்வாளர் களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் கருத்தியல் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக போலித் தமிழ்த் தேசிய அமைப்புகளையும், போலி இடதுசாரி அமைப்புகளையும் இறக்கிவிடுவது. தமிழ்நாட்டில் இவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் தமிழ்த்தேசியப்புரட்சி வளரும்!ஈழத்தைப் பொறுத்தவரை, மறுபடியும் போராளிகள் வருவார்கள் . அவர்கள் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் போல் பெருந்தன்மையுடனும், கருணையுடனும் நடந்து கொள்ள மாட்டார்கள். தமிழ்ப் பொதுமக்கள் சிங்களரால் தாக்கப்பட்டால், அதற்கு ஈடாகவோ அல்லது அதைவிடக் கூடுதலாகவோ சிங்களப் பொதுமக்களுக்கு சேதத்தை உண்டாக்குவார்கள். இதை நாம் விரும்பவில்லை. ஆனால் இத்திசையைத்தான் ஈழ விடுதலைக்கு எதிர்காலம் விட்டுவைத்துள்ளது. இதற்கு இன்னும் சிறிதுகாலம் பிடிக்கும். இலங்கைக்கு எந்தெந்த நாடுகள் உதவுகின்றனவோ அந்தந்த நாட்டுக்கும் எதிராக உள்ள நாடுகளிடம் ஈழ விடுதலைப் போராளிகள் உறவு வைப்பார்கள். ஈழ விடுதலைப் போராட்டம் அப்போது தனிமைப்பட்டிருக்காது.இலங்கையில் சிங்களக் கட்சிகளிடையே முரண்பாடுகள் முற்றி மோதல்கள் அதிகரிக்கும். போர்ப் பொருளாதாரத்தில் திவாலாகிப் போன இலங்கை அரசை எதிர்த்து மக்கள் கலகம் செளிணிவார்கள். சிங்கள இனம் தனக்குத்தானே முரண்பட்டு சீரழியும். வரலாறு கொடுக்கும் வாளிணிப்பைப் பயன்படுத்தி, சிங்கள இனவெறியை எதிர்த்து ஈழம், சிங்களம் என்ற இரு தேசத்தை ஏற்றுச் செயல்படக்கூடிய புதிய அரசியல் தலைமை சிங்களர்களிடையே செல்வாக்குப் பெற்றால் சிங்கள இனத்திற்கும் எதிர்காலம் இருக்கும்!.
இரட்டை வேடதாரிகள்
இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள் என்ற அமைப்பின் சார்பில் ஜெகத் கஸ்பர் ஆகஸ்ட் 28 அன்று சென்னையில் செளிணிதியாளர் கூட்டம் நடத்தினார். அதில் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு முறையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செளிணிதிக் குறிப்புகள் தரப்பட்டன.ஆங்கிலத்தில் தரப்பட்ட குறிப்பில் Independent Enquiry into the War Crimes committed by Both the Parties of the Conflict (இலங்கையில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் இழைத்த போர்க்குற்றங்கள் மீது விசாரணை வேண்டும்) என்று புலிகளையும் விசாரணைக்குட்படுத்தும் கோரிக்கையை வைத்தனர். ஆனால், தமிழில் அது இல்லை. இன்னொருபுறம், தமிழ்க் குறிப்புகளில் இலங்கையில் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை இந்திய அரசு அனுப்ப வேண்டும் என்று இருந்தது. அது ஆங்கிலத்தில் இல்லை.ஆனால், இரு மொழிக் குறிப்புகளிலும் பிரதமருக்குக் கடிதம் எழுதிய கலைஞரை பாராட்டத் தவறவில்லை. தில்லிக்கு ஒரு முகமும், தமிழருக்கு ஒரு முகமும் காட்டுகிறார் ஜெகத் கஸ்பர்.நிர்வாணக் கொலைகளை சிங்கள இராணுவம் நிகழ்த்தியிருப்பது படங்களோடு வெளியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் எழுந்து வரும் கொந்தளிப்பை மட்டுப்படுத்தவும் மடை மாற்றவும் இந்திய அரசின், கருணாநிதி ஆட்சியின் கையாளாக ஜெகத் கஸ்பர் செயல்படுவது தெளிவாகிறது. இவரது இரட்டை வேடத்தை தமிழின உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டாயக் கொடியேற்றத் தீர்ப்பு சட்டப்படி சரியா?



சென்னை உயர்நீதி மன்றம் மாறுபட்ட பிணை ஆணை வழங்கி, சனநாயகத் திரையில் கிழிசலை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஓட்டை வழியே உள்ளே இருக்கும் விகாரங்கள் தெரிகின்றன. இந்திய அரசுக் கொடி எரிப்பு வழக்கில் இவ்வாறு மாறுபட்ட பிணi ஆணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ஆர். இரகுபதி வழங்கியுள்ளார். அவ்வாணை பின்வருமாறு கூறுகிறது.

விலைமதிப்பற்ற தேசியச் சின்ன்னத்த்தின் மதிப்பை அவர்கள் உணரவேண்டுடும்.. அதன் புனிதத் தன்iமையை அவர்கள் உயர்த்த்திப் பிடிக்கவேண்டும் என்பதற்காகக் கீழ்வரும் நிபந்தனை விதிக்கிறேன்.“ எட்டுடுப் பேரும் தங்கள் வீட்டு முன்பு கொடிக்கம்பத்தை நட்டுடு, ஒரு வாரத்த்திற்குகு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். அத்துடன் அனாதை இல்ல்லத்த்திற்குகுச் சென்று ஒரு வாரத்திற்கு நாள்தோறும் மூன்று மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இரு அமைப்புகளும் 25.4.2009 அன்று இந்திய அரசுக் கொடியையும் இலங்கை அரசுக் கொடியையும் எரிக்கும் போராட்டத்தை நடத்தின. பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இலங்கை அரசுக்கு கொடிய போர்க்கருவிகளையும் கோடிகோடியாய் பணத்தையும் கொட்டிக் கொடுக்கிறது இந்திய அரசு, எங்கள் இனத்தை அழிக்கும் போரை இந்தியா இயக்குவதைக் கண்டிக்கும் வகையில் ஒரு சனநாயகப் போராட்டமாக இப்போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை, ஓசூர் போன்ற இடங்களில் இப்போராட்டங்களில் ஈடுபட்ட தோழர்களைத் தளைப்படுத்தி அன்று மாலையே விடுவித்து விட்டனர். தஞ்சை, ஈரோடு ஆகிய இடங்களில்தளைப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் பின்னர் அன்றாடம் காவல் நிலையத்தில் கையொப்பமிடும் நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். தஞ்சையில் நமக்காக வழக்குரைஞர் கருணாநிதி வாதாடினார். ஈரோட்டில் வழக்குரைஞர் ப.பா. மோகன் வாதாடினார்.ஆனால் கோவையில் மட்டும், குற்றவியல் நடுவர் மன்றம் மாவட்ட நீதிமன்றம் ஆகியவை பிணை வழங்க மறுத்தன. அங்கு வழக்கறிஞர் காந்தி நமக்காக வாதாடினார்.

பின்னர் பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் எஸ்.துரைசாமி நமக்காக வாதாடினார். ”ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல் சென்னை உயர்நீதிமன்றம் 9.6.2009 அன்று மேற்படி நிபந்தனை விதித்து பிணை வழங்கியது.

இந்த வழக்கில் எட்டுத் தோழர்கள் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர். 1. தோழர் பா. தமிழரசன்(த.தே.பொ.க) 2) தோழர்.வி. பாரதி (த.தே.வி.இ), 3) தோழர் பா. சங்கரவடிவேலு(த.தே.பொ.க), 4) தோழர் க. தேவேந்திரன் ( த.தே.வி.இ), 5) தோழர் பி. தனபால் ( த.தே.பொ.க), 6) தோழர் குணசேகரன் (த.தே.வி.இ), 7) தோழர். வி. திருவள்ளுவன்- ஆதரவாளர், 8) தோழர் ஜி.சீனிவாசன் - இன உணர்வாளர்.மேலே விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நடப்பில் உள்ள சட்டநெறிகளுக்குப் புறம்பானவை.

நீதிபதியின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஆகும். பிணையில்லா (Non-Bailable) குற்றப் பிரிவுகளில் சிறைப்பட்டோர்க்குப் பிணை வழங்குவது நீதிபதியின் விருப்பத் தேர்வாகும் (Discretion).பிணை மறுப்பதற்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. சாதாரணக் குற்றங்களில் அறுபது நாட்களுக்குள் காவல்துறை குற்ற அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனில். எந்த நிபந்தனையுமின்றி சிறையில் உள்ள வரைக் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பிணையில விடுவித்து விடவேண்டும். கொலைவழக்கில் இந்தக் காலக்கெடு 90 நாட்கள். இந்தக் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள், பிணையில பிணை யில்லாப்பிரிவுகளில்சிறைப்பட் டோர்க்குப் பிணை வழங்குவது நீதிபதியின் விருப்பத்தேர்வாகும். பிணை வழங்கலாம், பிணை வழங்க மறுக்கலாம்.

பிணைவழங்குவதற்கு சட்ட நெறிமுறைகள் இருக்கின்றன.இந்தியக் குற்றவியல்நடைமுறைச் சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்மீது விசாரணை நடந்து, குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரை அவர் நிரபராதிதான். இந்த நிரபராதியை ஐயத்தின் பேரிலேயே நீதித்துறை தனது காவலில் வைத்துள்ளது. சிறைக்காவல் என்பது சட்டப்படி நீதித் துறைக் காவல்தான். நீதித்துறைக்கு உதவுவதற்காகவே அரசு, சிறைகளைப் பராமரிக்கிறது. கற்றறிந்த நீதிபதி இரகுபதி அவர்கள் மேற்கண்ட சட்டநெறிகளை, நாம் விவாதிக்கும் வழக்கில் கடைபிடிக்கவில்லை.

பிணை வழங்கும் கட்டத்திலேயே, குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதாக அவர் முடிவுக்கு வந்து விட்டார். அதவாது காவல்துறை குற்ற அறிக்கை (Charge sheet) அணியப்படுத்தும் முன், அவ்வறிக்கை அடிப்படையில், நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் முன் காவல்நிலையத்தின் முதல் தகவல் அறிக்கையை (FIR) மட்டும் சார்ந்து நின்று பிணை நிபந்தனை என்ற பெயரில் தண்டனை வழங்கியுள்ளார். எந்தக் கொடியை எரித்தார் என்று குற்றச்சாட்டு உள்ளதோ அந்தக் கொடியைத் தன் வீட்டு முன் ஒருவாரம் ஏற்ற வேண்டும் என்பதும் அனாதை இல்லத்தில் ஒருவாரத்திற்கு நாள் தோறும் மூன்று மணி நேரம் சேவை செய்ய வேண்டும் என்பதும், குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதாக முடிவு செய்து கொண்டு.

அதற்கான பரிகாரமாக வழங்கப்பட்ட தண்டனை ஆகும்.இவ்வாறு பிணை நிபந்தனையில் தண்டணை வழங்க இந்திய நீதிமுறையில் நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை. இரண்டாவதாக பிணையில் விடுதலை செய்யும் போது விதிக்கப்படும் நிபந்தனைகள், வழக்கு விசாரணைக்கு உதவி செய்வதற்குத் தானே அன்றி, குற்றச்சாட்டின் தன்மைக்கேற்ப தண்டனை வழங்குவதற்கு அல்ல. குற்றஞ்சாட்டப்பட்டவர் பிணையில், வெளியே வந்து சாட்சிகளைக் கலைப்பார் என்றோ, விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டார் என்றோ தலைமறைவாகிவிடுவார் என்றோ ஐயங்கள் ஏற்பட்டால் அதற்கேற்றவாறு நிபந்தனைகள் விதிக்கலாம் அல்லது பிணை மறுக்கலாம்.

இந்த வகையில்தான் வெளியூரிலோ அல்லது சொந்த ஊரிலோ, காவல் நிலையம் அல்லது நீதிமன்றத்தில் ஒருநாளைக்கு இருமுறை அல்லது ஒருமுறை கையொப்பமிட வேண்டும் என்று நிபந்தனைவிதிப்பார்கள். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை கையொப்பமிடவேண்டும் என்றும் நிபந்தனை விதிப்பார்கள். கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கச் சொல்வார்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் ஒன்று வரப்போகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அவர் மேசையில் அது வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏழு ஆண்டுகளுக்குக் குறைவாகத் தண்டனை உள்ள குற்றங்களில், தளைப்படுத்தப்படுவோரை காவல்நிலையத்திலேயே பிணையில் விட்டுவிடலாம்.அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைக்க வேண்டியதில்லை என்பதே அத்திருத்தம்.கொடியெரிப்புக் குற்றத்திற்கு அதிக அளவு தண்டனையே மூன்றாண்டுகள்தான்.

குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் போதும். ஆனால் எரிக்கப்போன கொடியை “ஏற்று’’ என்று நிபந்தனை விதிப்பது, கண்ணைக் குத்தியவன் கண்ணைக் குத்து என்ற கட்டளையிடும் அநாகரீகக் காலத் தண்டனையாகும். நாகரிகக்கால குற்றவியல் நீதிமுறைக்கு (Criminal Justic system) எதிரான தீhப்பாகும் இது. மங்கைதீட்டானால் கங்கையில் குளிக்கலாம். கங்கையே தீட்டானால் எங்கு குளிப்பது என்பது போன்றதுதான்.சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தண்டனை. குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்கும் போது காவல்துறை காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு நீதிமன்றத்திடம் உள்ளது. நீதிமன்றமே அப்படி நடந்து கொண்டால் அதை என்ன வென்று சொல்வது?நீதிமன்றம் வழங்கிய இந்த அநாகரிகத் தண்டணை, வெறும் “நிபந்தனை’’ என்று மூடி மறைப்பது, புண்ணை மறைக்கப பட்டுத்துணியால் அதைப் போர்த்தும் உத்தியாகும்.

நீதிபதி இரகுபதி அவர்களின் தேசபக்தியை நாம் குறை சொல்லவில்லை. அவர் மிகை உற்சாகத்தில், சட்டநெறிகளுக்குப் புறம்பாக செயல்படக்கூடாதல்லவா!இந்திய அரசுக் கொடியை அவமதித்தால் அதிக அளவு மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கலாம். அதே கொடியைத் திரும்ப ஏற்ற வேண்டும் என்ற தண்டனை அந்தச் சட்டத்தில் (The prevention of Insults to national Honour Act-1971, Section 2) கிடையாது. மேற்படிச் சட்டம் கொடியை அவமதிக்கக்கூடாது என்கிறதே தவிர,கொடியை மதித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

கற்றறிந்த நீதிபதி இரகுபதி அவர்கள் சட்டத்தின் இந்த உண்மை நிலையைக் கணக்கில் கொள்ளவில்லை. தேசபக்தியின் மிகை உற்சாகம் சட்ட உண்மைகளைப் பார்க்கவிடாமல் அவர் கண்களை மறைத்துவிட்டது.இந்திய அரசுக் கொடியை ஏற்றும்படி ஒருவரைக் கட்டாயப்படுத்துவதற்கு எந்தச் சட்டமும் இல்லை. இப்படிக் கட்டாயப்படுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும். தேசியச்சின்ன அவமதிப்புத் தடைச்சட்டத்திற்கும் எதிரானதாகும். ஏற்கெனவே இதுகுறித்து உச்சநீதிமன்றத்தீர்ப்பொன்று உள்ளது. அது ஜனகனமனப் பாடலைப்பாட மறுத்த கேரள மாணவிகளைப் பள்ளியைவிட்டு நீக்கியது தொடர்பான வழக்காகும்.

பிஜோ இம்மானுவேலும் மற்றவர்களும் எதிர் கேரள அரசும் மற்றவர்களும் - 1986 என்பது அவ்வழக்கு.கிறித்துவமதத்தில் ஜெஹோவா விட்னஸ் என்றொரு பிரிவு இருக்கிறது. அப்பிரிவைச் சேர்ந்தவர்கள் இறைவனை அன்றி வேறு யாரையும் புகழ்ந்து பாடமாட்டார்கள். ஆகவே, பள்ளியில் ஜனகணமனப் பாடப்படும்போது அப்பிரிவைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் பிஜோ, பிந்துமோல், பிந்து இம்மானுவேல் ஆகியோர் பாடாமல், நிற்பார்கள். இதற்காக, தேசியச் சின்னத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி அம்மூன்று சிறுமிகளையும் பள்ளியைவிட்டு நீக்கி விட்டார்கள்.

கேரள உயர்நீதிமன்றம் 1971-தேசிய சின்ன அவமதிப்பு தடைச் சட்டப்படி அம்மாணவிகளைப் பள்ளியை விட்டு நீக்கியது சரி என்று தீர்ப்பளித்தது.உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு வந்தது. நல்ல வாய்பப்பாக நீதிபதி ஓ.சின்னப்பரெட்டி அமர்வு மன்றத்தில் அவ்வழக்கு ஆய்வு செய்யப்பட்டது. இன்னொரு நீதிபதி எம்.எம்.தத். சின்னப்பரெட்டி அமர்வுமன்றம், கேளர உயர்நீதிமன்றத் தீர்ப்பை நீக்கி, அம்மாணவிகளைப் பள்ளியில் சேர்க்குமாறு தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் கூறப்பட்ட காரணங்கள் நம் கட்டாயக் கொடியேற்றத் தீர்ப்புடன் முரண்படுகின்றன.

“ஒருவரைக் கட்டாயப்படுத்தி தேசிய கீதத்தைப் பாடவைக்க எந்த சட்டப்பிரிவும் இல்லை... தேசிய கீதத்தைப் பாட மறுப்பது தேசியச் சின்ன அவமதிப்புத் தடைச்சட்டம் விதி மூன்றை மீறய செலாகாது. “மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு கூறு, மனச்சான்று மறுக்கும்போது அதன்படி தேசிய கீதத்தைப் பாடமறுப்பது அரசமைப்புச் சட்ட விதி 51யு(ய) விதிக்கும் குடிமக்கள் கடமையைச் செய்யத் தவறிய குற்றமாகாது. “(கேரள) உயர்நீதிமன்றம் தன்னைத்தானே தவறாக வழிநடத்திக் கொண்டு விட்டது என்று நாங்கள் அஞ்சுகிறோம், முற்றிலும் மாறுபட்ட திசையில் அது சென்று விட்டது” – 1986, SCC Vol3, Page 615-632.அரசமைப்புச்சட்ட விதி 51-யு(ய) பின்வருமாறு குடிமக்கள் கடமையை வரையறுக்கிறது.51-யு(ய) ஒவ்வொரு குடிமகனுக்குமுரிய கடமையாக இது இருக்கிறது. (ய) அரசமைப்புச் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். அதன் உயர்நோக்கங்களை மதிக்க வேண்டும்.

அதன் கீழ் அமைந்த நிறுவனங்கள், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும். நீதிபதி சின்னப்பரெட்டி வழங்கிய மேற்படித்தீர்ப்பில், மாணவிகள் தேசிய கீதம் பாடாதது விதி 51யு(ய) - இன்படி குற்றமாகாது என்று கூறியுள்ளார். அதாவது தேசிய கீதத்தைப் பாடும்படி கட்டாயப்படுத்த சட்டம் எதுவுமில்லை என்கிறார்.

அதேபோல் “தேசியக்கொடியை“ ஏற்றும்படி கட்டாயப்படுத்தவும் சட்டம் எதுவும் கிடையாது என்பது நமது நிலைப்பாடு.நீதிபதி இரகுபதி அவர்கள் தமது தேசபக்தி மிகை உற்சாகத்தின் காரணமாக, “தேசியக்கொடியை” ஏற்றும்படி, சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டாயப்படுத்தி உள்ளார். அவருடைய மிகை உற்சாகம் அத்துடன் நிற்கவில்லை.

தமிழக முதலமைச்சர் கருணாநிதியை இவ்வழக்கின்போது பொருத்தமில்லாது புகழ்ந்து தள்ளினார்.அவருடைய 9.6.2009 நிபந்தனை ஆணையை மறு ஆய்வு செய்யுமாறு சிறையில் உள்ள தோழர்கள் தமிழரசன், பாரதி, சங்கரவடிவேலு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மறு ஆய்வு மனு விசாரணையின் போது, 23.6.2009 அன்று நீதிபதி இரகுபதி கருணாநிதியை விதந்து பாராட்டினார்.இந்திய அரசுக் கொடியை ஏற்றும் உரிமை முதலமைச்சர்களுக்கு இல்லாமல் இருந்தது, இப்போதைய தமிழக முதலமைச்சர் தான் போராடி அவ்வுரிமையைப் பெற்றார் என்றார். கருணாநிதியின் கொடிப் போராட்ட வரலாறு கற்றறிந்த நீதிபதிக்குத் தெரியவில்லை போலும்.

1970களின் தொடக்கத்தில், மாநில சுயாட்சி மாநாடு நடத்தி, இந்திய தேசியக் கொடிக்கு மாற்றாக, தமிழக அரசு அலுவல்களில் ஏற்ற ஒரு புதிய தமிழ்த் தேசியக் கொடியை அம்மாநாட்டில் ஏற்றி அறிமுகப்படுத்தினார். அதே கருணாநிதிதான், தாம்கோரிய தமிழ்த்தேசியக் கொடிக்கு உரிமை பெறப்போராடமல், குட்டிக்கரணம் அடித்து இந்திய தேசியக் கொடியை விடுதலை நாளில் ஏற்றுவதைப் பெரும் பேறாகக் கருதி அவ்வுரிமை கோரினார்.தமிழ்த் தேசியக்கொடி கோரியவர் பாரதமாதா பஜனை பாட முன்வந்ததைக் கண்டதும் தில்லி ஆட்சியாளர்கள் பூரித்து, பாதை திரும்பிய வளர்ப்பு மகனாக கருணாநிதியை ஏற்று, தங்கள் கொடியை அவர் கையில் கொடுத்தனர்.

கருணாநிதியின் இன்னொரு வரலாறும் கற்றறிந்த நீதிபதிகுத் தெரிந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். இந்தித் திணிப்பை எதிர்த்து 1986 அல்லது அதை ஒட்டி இந்திய அரசமைப்புச் சட்ட விதி 343-ஐக் கொளுத்தினார் கருணாநிதி. அவர் மட்டுமல்ல.

தி.மு.கவினர் பலரும் கொளுத்தினர். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கருணாநிதியைப் பழிவாங்குவதற்காக, அரசமைப்புச் சட்ட எரிப்புக்காக அவர் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தார். ஆனால் அந்த வழக்கில் அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.கற்றறிந்த நீதிபதி இரகுபதியைப் போல், கருணாநிதி முன்னுக்குப்பின் முரணில்லாத தேசபக்தர் அல்லர் என்பதற்காக இவற்றைச் சுட்டிக் காட்டினோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரித்தவர் தாம் இன்று நீதிபதி மெச்சும் முதலமைச்சராக உள்ளார்.

ஈழத்தில் தமிழ் இனத்தை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்க ஆயுதம் கொடுத்த இந்திய அரசைக் கண்டிப்பதற்காக அடையாளப்பூர்வமாக அரசுக்கொடி எரிப்புப் போராட்டம் நடத்தினால் அது மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் அதே நீதிபதி. ஆளுக்கொரு நீதியா?இந்திய அரசுக்கொடி பொறித்த பீரங்கிகளும் டேங்குகளும் எங்கள் தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கும்போது நாங்கள் அந்தக் கொடியை வணங்க வேண்டுமா? ஈழ இனப்படுகொலை எங்கள் பிள்ளைகளின் நெஞ்சில் மாறா வடுவாக இருக்கிறது.

ஒவ்வொரு காலையிலும் கல்விக்கூடங்களில் இக்கொடி ஏற்றப்படும் போது எங்கள் பிள்ளைகளுக்கு, அக்கொடியில் ஈழக்குழந்தைகள் அலறும் ஒலிகேட்கும். ஈழத்தமிழர்களின் குருதியும் சதையும் அந்தக் கொடியில் வழிவது அவர்கள் மனக்கண்ணில் தோனறும்.

கொடி எரிப்புப் போராட்டத்தில் சிறைப்பட்ட தோழர்களே, தமிழ் இனத்தின் உயிர்காக்கப் போராடியிருக்கிறீர்கள், உங்களை வரலாறு வாழ்த்தும், வருங்காலத் தலைமுறை போற்றும். உங்கள் விடுதலைக்காக சட்ட வழிகளிலும் சனநாயக வழிகளிலும் போராடுவோம்.

தமிழின எழுச்சியும் தடங்கல்களும்


சிங்களப் பேரினவாத வெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவிப்பது, தமிழ்நாட்டில் மிகப்பரந்த தற்காப்பு உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவிர்த்த மற்ற அரசியல் கட்சிகள் போர் நிறுத்தம் கோரிவருகின்றன. மேற்கண்ட மூன்று கட்சிகளும் சிங்களர் நடத்தும் தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்துமாறு கோரக் கூடாது என்ற நிலை எடுத்துள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு அப்பால், பல்வேறு உழைக்கும் மக்கள் பிரிவினர்-முடிதிருத்துவோர் சங்கம் உள்ளிட்டு மூட்டை தூக்குவோர் சங்கம் வரை, போர் நிறுத்தம் கோரி உண்ணாப்போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ செய்து வருகின்றன. அதேபோல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவை தொடங்கி, அந்தந்தப் பகுதி சிறிய நடுத்தர வணிகர் அமைப்புகள் வரை போர் நிறுத்தம் கோரி, ஏதோ ஒரு வகையில் இயக்கம் நடத்தி வருகின்றன.
பெரும் தொழிற்ச்சாலைகளில், பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படும்பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஈழத்தமிழர் இனப்படுகொலையைக் கண்டிக்கும் இப்போராட்டத்தில் பங்கு பெறாமல் ஒதுங்கி நிற்கின்றன. தமிழக மற்றும் இந்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளும் அவ்வாறே ஒதுங்கி நிற்கின்றன.
ஆனால் அவ்வமைப்புகளில் உள்ள சனநாயக உணர்வாளர்களும், இன உணர்வாளர்களும் தங்கள் விருப்பத்தின் பேரில் போர் நிறுத்தக் கோரிக்கைப் போராட்டங்களில் பங்கு கொண்டனர்.பார்ப்பனிய மேலாதிக்க அமைப்பான பாரதியசனதாக் கட்சியின் தமிழகப் பிரிவு கூட போர் நிறுத்தம்கோருகிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் போர்நிறுத்தம் கோரி எந்த இயக்கமும் நடத்தவில்லை.
அதுமட்டுமின்றி போர்நிறுத்தக் கோரிக்கையை எதிர்த்தும் வருகின்றன. 22.11.2008 அன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சி நேருக்குநேர் நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுச் செயலாளர் என்.வரதராசன் ஏகாதிபத்தியங்களின் தூண்டுதலால் தான் விடுதலைப் புலிகள் பிரிவினைப் போர் நடத்துகிறார்கள் என்றார்.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஏகாதிபத்திய நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ளன.
ஆனால் சற்றும் நாகூசாமல், விடுதலைப் புலிகளை ஏகாதிபத்தியம் தூண்டி விடுகிறது என்கிறார் வரதராசன். பெருந்தேசிய இன ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, அதன்கீழ், இரண்டாம் தரக்குடிமக்களாக வாழ்வதே சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு விதிக்கப்பட்ட விதி. இதுவே பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற நிலை எடுத்து மார்க்சிய லெனியத்தைக் கொச்சைப்படுத்தி வருகிறது மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவிலும் இதே பேரினவாத ஆதரவுத் தேசியக் கொள்கையையே அது கடைபிடிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்சின் இன்னொரு அரசியல் வடிவமாகவே அண்ணா தி.மு.க.வை செயலலிதா நடத்தி வருகிறார். ஆதலால், தமிழ், தமிழ் இனம் சார்ந்த உரிமைப் போராட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அந்த இனப் பகைமையின் தொடர்ச்சியாகவே, ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு உள்ளாவதைக் கண்டித்து எந்தப் போராட்டமும் அவர் நடத்தவில்லை.
தமிழ் இனத்தைப் பகைத்துக் கொண்டாலும், தமிழர்களின் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற ஓர் அரசியல் சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்தத் தமிழ் இன எதிர்ப்பு நீரோட்டத்தின் இரண்டு கரைகளாக செயலலிதாவும் கருணாநிதியும் இருக்கின்றனர். தமிழ் இன உணர்ச்சியைப் பயன்படுத்திப் பதவி அரசியல் நடத்தும் பாசாங்குக்காரர் கருணாநிதி. அவருடைய பாசாங்கு, தன்னலப் போக்கு, சூழ்ச்சிகள் போன்றவை தமிழ் மக்களில் கணிசமானோரை செயலலிதா பக்கம் விரட்டியுள்ளன.
தமிழ் இனப் பகைவரான செயலலிதாவின் அரசியல் வலிமைக்கு எதிர்வகை ஆதாரமாக இருப்பவர் கருணாநிதி. அதேபோல் கருணாநிதியின் பாசாங்கு இன அரசியலே பாலைவன நீர்போல்ஒரு சாரார்க்குக் காட்சி அளிப்பதற்குக் காரணம் செயலலிதாவின் தமிழ் இன எதிர்ப்பு அரசியலே.
இவ்வாறாக, செயலலிதா கருணாநிதியின் அரசியல் வலிமைக்கு எதிர்வகை ஆதாரமாகச் செயல்படுகிறார்."அரசியல் என்பது குருதி சிந்தாத போர், போர் என்பது குருதி சிந்தும் அரசியல்" என்றார் மாவோ. போரிலும் சரி, அரசியலிலும் சரி பகைவர்களை முற்றிலுமாக முறியடிக்க வேண்டுமெனில், பாசாங்குக்காரர்களை முதலில் அடையாளம் காணவேண்டும்.
அவர்கள் குழப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.பாசாங்குக்காரர் என்பவர் யார்? ஒரே நேரத்தில் எதிர் எதிர் முகாம்களுக்கிடையே உறவு வைத்துக்கொள்பவர். எந்த நேரத்திலும் தன்னலம் காக்க ஏதாவதொரு முகாமுக்கு இரண்டகம் செய்பவர். இன்று தமிழ்த் தேசியம் எதிர்கொள்ளும் மிகமோசமான குழப்பவாதிகள் இந்த இரண்டுங்கெட்டான் இன உணர்வாளர்கள் தாம்! ஈழத்தில் போர் நிறுத்தம் செய்வதை 15 நாட்களில் இந்திய அரசு உறுதி செய்யவேண்டும் இல்லையேல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவர் என்று 14.10.2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முன்மொழி;ந்த தீர்மானத்தை, அதில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றனர். (காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் பிறகு மாற்றிக்கொண்டனர்)நாடாளுமன்றத் தி.மு.க. உறுப்பினர்கள் முந்திக்கொண்டு விலகல் கடிதங்களை முன்கூட்டியே கலைஞரிடம் கொடுத்தனர். பின்னர் மனிதச் சங்கிலி (24.10.2008) நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஓங்கிக்குரல் கொடுத்தார் கலைஞர். ஆனால், 26.10.2008 மாலை பிரணாப்முகர்ஜி சென்னை வந்து அவரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின் அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். நடுவண் அரசு நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என்றார். பிரணாப்முகர்ஜி நடுவண் அரசு முடிவுகளை அன்று (26.10.2008) மாலை தமிழகமுதல்வர் வீட்டு வாயிலில் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். அம்முடிவுகள்:
1. இந்திய அரசு போர் நிறுத்தம் கோராது.
2. இலங்கை அரசுக்குப் படைக்கருவிகள் கொடுப்பது, இந்தியாவில் உள்ள சில நிறுவனங்களைப் பாதுகாக்கவே.
3. இலங்கைப் படையினர்க்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை நிறுத்த முடியாது. அவ்வாறான பயிற்சி பல நாட்டுப் படையினர்க்கும் இந்தியாவில்அளிக்கப்படுகிறது.
4. இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்கள் இந்திய அரசு சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் அனுப்பி வைக்கப்படும். இப்பொருட்கள்செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
மேற்கண்ட நடவடிக்கைகளில் எது மனநிறைவைத் தந்தது கலைஞர் கருணாநிதிக்கு? உதவிப் பொருட்களை போர் நடக்கும் வன்னிப்பகுதிக்குள் கொண்டு போய் கொடுக்க செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.
போர் நிறுத்தம் கோர மறுத்ததுடன், சிங்கள அரசுக்கு ஆய்த உதவி, நிதி உதவி, பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நிறுத்திவிட இந்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. எதில் மனநிறைவடைந்தார்?
அது மட்டும் அல்ல, அடுத்த நாட்டில் எந்த அளவு இந்தியா தலையிடமுடியும்?
இலங்கையின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் கோரினால், பிறகு இலங்கை இந்தியாவின் உள் விவகாரங்களில் இனத் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் கோரினால், பிறகு இலங்கை இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் நிலை ஏற்படும் என்று நடுவண் அரசுக்குப் பரிந்து பேசினார் கருணாநிதி.
அத்தோடு நில்லாமல், விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்ய முன் வரவேண்டும் அல்லவா? சிங்கள அரசு மட்டும் ஒருதலைச் சார்பாக போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று கோரமுடியுமா எனவும் கேட்டார்.ஆனாலும் தமிழ்நாட்டில் அங்கங்கே, அரசியல் இயக்கங்கள் சார்பிலும், அரசியலுக்கப்பாற்பட்ட பல்வேறு தரப்பினர் சார்பிலும் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. ஈழத் தமிழர்க்கான போராட்டம் வேறு யார் தலைமைக்கும் போய்விடாமல் தம் தலைமையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட வடிவத்தில் மட்டும் நடைபெற வேண்டும் என்பதே கலைஞர் கருணாநிதியின் திட்டம்.
இப்பொழுது மீண்டும் ஈழத்தமிழர்க்காக கண்ணீர் சிந்தத் தொடங்கிவிட்டார். கிறித்துவ அமைப்பினர் வழங்கிய விருந்தினைப் பெற்றுக் கொண்டு 23.11.2008- ல் சென்னையில் பேசிய போது, ஈழத்தமிழர்களுக்கு நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்பதே எனது முதன்மையான, கடைசியான ஆசை என்றார். சட்டமன்றக் கட்சிகளின் அனைத்துத் கட்சிக் கூட்டத்தை 25.11.2008 அன்று கூட்டி பிரதமரைச் சந்தித்து போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவது என்று தீர்மானம் போட்டார்.
அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, போர் நிறுத்தம் கோரி நடுவண் அரசு அலுவலகங்;களில் மறியல் வைத்த நாளில் இக்கூட்டத்தை கலைஞர் கூட்டினார்.ஈழத்தமிழர்க்காதரவாக எழும் தற்காப்புணர்ச்சியை இவ்வாறு மழுங்கடிக்கிறார், மடை மாற்றுகிறார் கலைஞர் கருணாநிதி.
பகைநோக்கோடு, ஈழத்தமிழர் சிக்கலை அணுகும் செயலலிதா, கிளர்ந்து வரும் தமிழக எழுச்சியைத் திசை திருப்பி தம்மை மையப்படுத்திக் கொள்வதற்காக பசும்பொன்னில் தம்மைக் கொல்லச் சதி என்று கூச்சலிட்டு, கண்டனப் போராட்டங்கள் நடத்தத் தம் கட்சியினர்க்குக் கட்டளையிட்டார். அதற்கு முன் தம்மைக் கைது செய்யச் சதி என்றார். வெவ்வேறு சிக்கல்களுக்காக அன்றாடம் அங்கங்கே போராட்டங்கள் என்று அறிவித்து வருகிறார்.
ஆனால் ஈழத்தமிழர்களுக்காக ஒரு போராட்டமும் நடத்தவில்லை அ.இ.அ.தி.மு.க. இத்தனை திசை திருப்பல்கள் இருந்தபோதும், ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் பொங்கிய எழுச்சி வற்றிவிடவில்லை. எனினும், தமிழகம் தழுவிய பேரெழுச்சியாக அது வளர்ந்துவிடவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.
இந்திய அரசை நெருக்கிப் பணிய வைத்து, அதன் வழி சிங்கள அரசு நடத்தும் போரை நிறுத்தும்படிச் செய்ய முடியவில்லை.போரை நிறுத்தும்படி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது சோனியாகாந்தியோ உரிய முறையில் ஒரு தடவை கூறினால் போதும். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும். பசில் இராசபட்சே, இராசபட்சே, எதிர்க்கட்சித் தலைவர் இரணில் விக்கிரம சிங்கே என்று சிங்கள இனவெறித் தலைவர்கள் ஒவ்வொருவராகத் தில்லி வந்து மன்மோகன், சோனியா, அத்வானி உள்ளிட்டோரைச் சந்தித்து, போர் நடத்த ஒப்புதல் பெற்றுக்கொண்டு, போரை நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கின்றனர், கொட்டமடிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் போர் நிறுத்தம் கோரி நாம் இவ்வளவு போராடியும் உரிய பலன் கிடைக்கவில்லையே, ஏன்? சுப்பிரமணியசாமி, சோ. இராமசாமி, இலங்கை ரத்னா என்.ராம் போன்ற மக்கள் ஆதரவற்ற ஆரியக் கேடர்கள் ஈழத்தமிழர்களுக்கெதிராக அன்றாடம் நஞ்சு கக்குகின்றனர். போர் நிறுத்தம் கூடாதென்று பயங்கரவாத அரசியல் பேசுகின்றனர். அவர்களுக்கிருக்கும் மக்கள் ஆற்றல் என்ன?
அவர்களால் எப்படி தமிழ் இனத்திற்கெதிராக, குறிப்பாக மனித உரிமைக்கெதிராக இவ்வளவு சுதந்திரமாகத் தமிழ்நாட்டில் பேசியும் எழுதியும் திரிய முடிகிறது?
அடுத்தவர் தோளில் தொற்றியே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகி, நடுவண் அமைச்சர்களாகவும் ஆகிவிடும், ஓணான்களான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சுதர்சனம் போன்ற காங்கிரசார், ஈழத்தமிழ் இனத்தின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு, வெறுப்பை உமிழ்வது எப்படி?
சென்னை சிங்களத் தூதரகத்தின் சம்பளப் பட்டியலில் உள்ள ஞானசேகரன் போன்ற காங்கிரசார் சிலர் நாவடக்கமின்றி தமிழீழத் தலைவர் பிரபாகரனைக் கொச்சையாகத் தொலைக்காட்சிகளில் இழிவுபடுத்திப் பேசுகின்றனர். பணம் தருபவனின் பாராட்டைப் பெறுவதற்காக இவர்கள் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் வேறுபலர், கட்சிக் கட்டுப்பாட்டை ஏற்று, விடுதலைப் புலிகளுக்கெதிராக எப்போதாவது பேசினாலும், மேற்கண்டவர்களைப் போல், தமிழ் இனத்திற்கு எதிராக வெறி கொண்டு அலைவதில்லை, ஆர்ப்பரிப்பதில்லை. அவர்களை நாம் மதிக்கிறோம்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எத்தனை தடவை கூறிவிட்டார் திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்று! திருமாவளவன் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏன்? தமிழ் இனத்தின் மீதே இளங்கோவனுக்கு ஏதோ ஒருவகைக் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அவர் திருமாவளவன் மீது பாய்கிறார்.சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு நடத்தும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு இந்திய அரசைக் கோரிய போது, அதை எதிர்த்தவர் இதே இளங்கோவன் தான். "தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டுமா வாழ்கிறார்கள்? மற்ற இனத்தாரும் வாழ்கிறார்கள். சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை எப்படி வழக்கு மொழியாக்க முடியும்" என்று கேட்டார். மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதையே இளங்கோவன் ஏற்கவில்லை என்று தெரிகிறது. கோபிச்செட்டிபாளையம் மக்களவைத் தொகுதியில் மிகப்பெரும்பாலான வாக்குகளைத் தமிழர்களிடமிருந்தே இளங்கோவன் பெற்றுள்ளார். சத்தியமங்கலம் தாளவாடி எல்லைப்பகுதிகளில் கொஞ்சம் கன்னடர்களிடமும் அவர் வாக்கு வாங்கியிருக்கக் கூடும். ஆனால் வாக்களித்து, சட்டப்பேரவை உறுப்பினராக, மக்களவை உறுப்பினராக, அமைச்சராக உயர்த்திய தமிழ் இனத்தின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏன்? அவருக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது?எல்லாம் செயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரும் கொடுத்த துணிச்சல் தான்.
திருமாவளவனைக் கைது செய்யுமாறு செயலலிதா விடாமல் கோருகிறார். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் ஆகியோரைத் தளைப்படுத்தி தில்லிக்கு விசுவாசம் காட்டிய கருணாநிதியே, அவர்களைப் போல் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசும் திருமாவளவனை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கிறார் இளங்கோவன்.
ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி காந்தியடிகள் பிறந்த நாளில் (2.10.2008) அனைத்துக் கட்சி உண்ணாப் போராட்டம் என்ற புத்தெழுச்சியை விரிவாகத் தொடங்கி வைத்தது இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் தமிழகத் தலைமை.
அதன் பிறகும் அக்கோரிக்கையை அக்கட்சி தீவிரமாக முன் வைத்துவருகிறது. இந்திய அரசு அலுவலகங்கள் முன் அனைத்துக் கட்சி மறியலுக்கும் (25.11.2008) அது முன்மொழிவு செய்தது. ம.தி.மு.க., தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பு வசிக்கும் அமைப்புகள் உள்ளிட்டுப் பல்வேறு அமைப்புகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து, வெற்றிகரமாக மறியல் போராட்டம் நடத்தின.
இந்த அணுகு முறையால் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மதிப்பும் தமிழ் நாட்டில் உயர்ந்தது. ஆனால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி. பரதன், தமிழகச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் 19.11.2008 அன்று செயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துத் தேர்தல் கூட்டணி பற்றிப் பேசினர். கேட்டால், இதுவேறு, அதுவேறு என்பார்கள்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் பாதுகாப்பு, போர் நிறுத்தம், என தனது முதன்மையான அரசியல் போராட்டத்தை ஈழத்தின் பக்கம் திருப்பியுள்ளது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
அவ்வாறு இருக்க, இந்த ஈழ நிலைபாட்டிற்கு நேர் எதிரான செயலலிதாவுடன் தேர்தல் உடன்பாடு காண்பது, பாலில் உப்புக்கல் கலந்தால் பால் திரிந்து போவது போல், சி.பி.ஐ.யின் ஈழ அரசியல் செயலலிதா உறவால் திரிந்து போகாதா? ஈழத்தமிழர் உரிமைக்காகப் போராடிய அரசியல் பலன் சி.பி.ஐ. கட்சிக்கும் கிடைக்குமா? தமிழ் மக்களிடையே உருவாக வேண்டிய இன உணர்ச்சியும், மனித உரிமைக்கான எழுச்சியும் பாதிக்கப்படாதா? சி.பி.ஐ.யின் இந்த அணுகுமுறை ஒரு மாற்று அரசியலை உருவாக்கப் பயன்படாது.
ஈழ விடுதலை ஆதரவு, விடுதலைப் புலிகள் ஆதரவு, ஈழத்தமிழர் துயர்துடைப்பு போன்றவற்றிற்குப் பல்வேறு உதவிகளையும் ஈகங்களையும் செய்தவர் வைகோ. இதற்காக ஏற்கனவே பொடாவில் 18 மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். இப்பொழுது கலைஞராலும் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால் அவரின் செயலலிதா ஆதரவு அரசியல், அவருக்குத் தமிழ் உணர்வாளர்களிடம் கிடைக்க வேண்டிய பெருஞ்செல்வாக்கை ஊனப்படுத்திவிடாதா? நாளையப் பலாக்காயை விட இன்றையக் களாக்காய் மேல் என்ற அரசியல் நிலைபாடுகள், அவர்கள் வளர்ச்சிக்கும் தடங்கலாகின்றன, தமிழர் எழுச்சிக்கும் தடங்கலாகின்றன.
இந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் உரிமைக்காகத் தமிழ்நாட்டில் அதிகம் போராடிய அமைப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஆனால் அக்கட்சி கலைஞர் கருணாநிதியின் பாசாங்கு அரசியல் தலைமையின் கீழ் குறுகிக் கிடக்கிறது. அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் குறிப்பிட்ட சாதி அமைப்பாக இருப்பதால், அந்த அடித்தளத்தைத் தக்க வைத்துக் கொண்டுதான், தமிழர் அரசியலைப் பேசமுடிகிறது. தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரி மதுரையில் அக்கட்சி நடத்திய மாநாடு, தனது அடித்தளத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி தான். குறிப்பிட்ட தமிழ்ச் சாதிக்கு அழுத்தம் கொடுக்கும் போது, பிற தமிழ்ச் சாதிகள் அந்த அமைப்பை அதன் தமிழர் ஆதரவு முழக்கத்தை எட்டி நின்று தான் ரசிக்கின்றன.
தீண்டாமை மற்றும் சாதி ஆகியவற்றின் ஒடுக்கு முறையை முறியடிக்கப் போராடுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குப் போராடுவதும் கட்டாயத் தேவை. அந்தப் போராட்டம் ஒட்டு மொத்தத் தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்துடன் இணைக்கப்படும் போது தான் தமிழர் ஒற்றுமை வளர்க்கப்படும். சாதி என்பதன் சாரமே சமூகப்பிளவும், மேல் கீழ் உறவும் தான். அதனால்தான், "சாதி ஒழித்தல் ஒன்று- நல்லதமிழ் வளர்த்தல் மற்றொன்று" என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்."சாதி என்ற தாழ்ந்த படிநமக்கெல்லாம் தள்ளுபடி" என்றார்.
அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி. ஈழத்தமிழர் உரிமைக்காகப் பல போராட்டங்களை அக்கட்சி நடத்தி வருகிறது. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் விடுதலைப் போராளிகள் என்று புதுதில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார் மருத்துவர் இராமதாசு. மற்ற சிக்கல்களில் கலைஞர் கருணாநிதியின் செயல்பாட்டை, அவரது நிலைபாட்டை வினாவுக்கு மேல் வினா கேட்டு, மடக்கி வரும் மருத்துவர் இராமதாசு ஈழச்சிக்கலில் மட்டும் கருணாநிதி கிழித்த கோட்டைத் தாண்டமாட்டேன் என்பது போல் நடந்து கொள்வது ஏன்? 14.10.2008 அனைத்துக்கட்சி தீர்மானங்களை செல்லாக்காசாக்கி நடுவண் அரசுடன் உடன்பாடு கண்ட கருணாநிதியை மருத்துவர் விமர்சிக்கவில்லை? பிரணாப்முகர்ஜியுடன், தாம் மட்டும் பேசி உடன்பாடு கண்ட முதல்வர் இந்திய அரசு நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என்று செய்தியாளர்களுக்கு செவ்வி கொடுத்தார்.
மறுபடியும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, பிரணாப்முகர்ஜி கூறிய முடிவுகளை அதில் வைத்து விவாதித்து அதன் பிறகல்லவா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் பற்றி ஒரு முடிவெடுத்திருக்க வேண்டும் கலைஞர். இதைக் கூட மருத்துவர் இராமதாசு கேட்கவில்லையே ஏன்?இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 17.11.2008 அன்று கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட கோ.க.மணி, போர் நிறுத்தம் கோரி 25.11.2008 அன்று முழு அடைப்பு நடத்துவதென்ற தீர்மானத்தை ஆதரித்தார். ஆனால் அக்கூட்டத்தை விட்டு வெளியே வந்தபின், முழு அடைப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி அதில்தான் முடிவெடுக்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். 18.11.2008 நாளிதழ்களில் (எ.டு. தினமணி) கோ.க.மணியின் முழுஅமைப்பு ஆதரவுச் செய்தியும் மறுபரிசீலனை கோரிய அறிக்கையும் வெளிவந்தன.சிங்கள அரசு நடத்தும் ஈழப்போரை மெய்நடப்பில் இந்திய அரசு தான் நடத்துகிறது. எனவே இந்திய ஆட்சியில் பங்கு வகிக்கும் பா.ம.க. ஒருபக்கம் நடுவண் அரசுக்கு நெருக்கடி ஏற்படாமலும் மறுபக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் இரட்டை நிலை எடுத்திருப்பது பளிச்சென்று தெரிகிறது. இந்த உத்தியை மூடி மறைக்க அது கலைஞர் நிழலில் ஒதுங்கிக் கொள்கிறது. ஈழச் சிக்கலில் தமிழகக் கட்சிகளிடையே பிளவு வந்து விடக்கூடாது என்ற பொது நிலையில் கலைஞர் முடிவுகளை ஏற்றுக் கொள்வது போல் ஒரு தோற்றத்தை பா.ம.க. வெளிப்படுத்திக் கொள்கிறது.
இந்த இரட்டை நிலை ஒருபக்கம் இருக்க, பா.ம.க. குறிப்பிட்ட சாதியை மட்டுமே தனது அடித்தளமாகக் கருதுகிறது. ஆனால் அச்சமூக மக்கள், அக்கட்சியில் கணிசமாக இருந்தாலும் கணிசமானோர் பல்வேறு கட்சிகளிலும் இருக்கின்றனர். மேலும் புதிய ஆட்சிக் கோட்பாடொன்றை மருத்துவர் இராமதாசு முன்வைக்கிறார்."பெரும்பான்மை ஆளவேண்டும்; சிறுபான்மை அதில் பாதுகாப்பாக இருக்கவேண்டும்" என்கிறார். இதன் பொருள் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட சாதியினர் ஆளவேண்டும். சிறுபான்மைச் சாதிகள் அதில் ஆளும் உரிமையற்று ஆனால் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்பதாகும். மருத்துவர் கூறும் பெரும்பான்மைக் கோட்பாடு சாதியோடு நிற்காது. மதத்திற்கும் நீளும். இந்துத்துவா அமைப்புகள் பெரும்பான்மைக் கோட்பாடு அடிப்படையில் தான் "இந்து தேசம் கலாச்சார இந்திய தேசியம்" என்ற கருத்தியலை முன்வைக்கின்றன. இப்பெரும்பான்மைக் கோட்பாடு பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு வழி அமைத்ததாக முடியும். இந்தக் கோட்பாட்டை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் சேர்த்துப் பொருத்தினால் பா.ம.க. வின் நோக்கம் நிறைவேறுமோ நிறைவேறாதோ என்று கருதி, தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கக் கோருகிறார். சாதி அடிப்படையில் தமிழ்நாட்டையே இரண்டாகப் பிரிக்கக் கோரும் ஒரு கட்சி எவ்வளவுதான் தமிழ் இன உணர்வு பற்றிப் பேசினாலும் அதன் அணுகுமுறை அக்கட்சி சார்ந்துள்ள சாதி உள்ளிட்ட எந்தச் சாதித் தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய இன உணர்வு அடிப்படையில் ஒன்று திரட்டப் பயன்படாது. தமிழ்நாட்டையே வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்கக் கோரும் கட்சி ஈழத்தில் வடக்கையும், கிழக்கையும் இணைக்கக் கோருவது தன் முரண்பாடுதான்.
பெரும்பான்மை ஆளவேண்டும்;, அதில் சிறுபான்மை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தியலும், தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு இனிப்பானவை.
ஏனெனில் அது தன் பகை இனமாகக் கருதும் தமிழ் இனம் பிரிந்து சிதறிப் போவதையே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. மொழிவாரி மாநில அமைப்புகளைத் தகர்த்து நிர்வாக வசதிகேற்ற சின்னசின்ன மாநிலங்களை உருவாக்கவே இந்திய ஆளும் வர்க்கம் விரும்புகிறது. துணைகண்டமாக விரிந்து கிடக்கும் இந்தியாவை நிர்வாக வசதிக்காக, சின்னச் சின்ன நாடாகப் பிரித்துத் தருவார்களா? அவ்வாறு இந்தியாவைச் சிறுசிறு நாடுகளாகப் பிரிக்கும் கோரிக்கையை பா.ம.க. முன்வைக்குமா?
ஒரு நாடு அல்லது தேசம் என்பதற்கான அடிப்படை அலகு, மதமோ, சாதியோ அல்ல. தேசிய இனம் தான் அடிப்படை அலகு, அதன்படியே உலகில் நாடுகள் அமைந்துள்ளன. சில தேசிய இனங்கள் கொண்ட நாடாக இருந்தால் தேசிய இனங்களின் கூட்டாட்சி தான் நடக்கிறது. இவ்வாறு அமையாத இடங்களில் விடுதலைப் போராட்டங்கள் நடக்கின்றன.
தமிழர்களுக்குள்ளேயே சாதி அரசியலை முதன்மைப்படுத்தும் பா.ம.க. நடத்தும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் எந்த அளவு தமிழர் ஒற்றுமையையும் எழுச்சியையும் உருவாக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.சனநாயகம் என்பதை பெரும்பான்மைவாதமாக சுருக்கிவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் அது ஒரு ஏதேச்சாதிகாரமாகும். பெரும்பான்மை சிறுபான்மை உள்ளிட்ட அனைவர்க்கும் ஆளும் உரிமையை வழங்குவதே சனநாயகம், தேசத்தின் கடைசிக் குடிமகனுக்கும் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கவேண்டும். கருப்பினத் தந்தைக்குப் பிறந்த ஒபாமா, வெள்ளை ஆதிக்க நாட்டில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் கொண்டாடக் காரணம், சிறுபான்மைக்கு வழங்கப்பட்ட சனநாயக உரிமையைப் பாராட்டவே.சிங்களப் படையினரால், தமிழக மீனவர்களும், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஈழத் தமிழர்களும் குண்டு வீசிக் கொல்லப்படுகிறார்கள்.
இந்திய அரசு சிங்களப் படைக்கு ஆய்தமும் பயிற்சியும் தருகிறது. போரைத் தொடர்ந்து நடத்தும்படி சிங்கள அரசை வலியுறுத்துகிறது. போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் விரிந்து பரந்து போராட்டங்கள் நடந்தாலும், இந்திய அரசை நெருக்கிப் பணிய வைத்து, போர் நிறுத்தத்தை நம்மால் சாதிக்க முடியவில்லையே, தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை, தளைப்படுத்தப்படுவதை நிறுத்த முடியவில்லையே என்ற பின்புலத்தில் மேற்கண்ட திறனாய்வு செய்யப்பட்டது.
தமிழ் இன எழுச்சி முழுவீச்சுப் பெறாததற்குரிய காரணங்களை அறிந்து அக்குறைகளைக் களைய வேண்டும் என்ற நோக்கில் தான் இப்பகுப்பாய்வு செய்யப்பட்டது. ஈழத்தமிழர் இனப்படுகொலை, மீனவர் கொலை, போன்றவற்றிற்கெதிராக மட்டுமின்றி, ஆற்றுநீர் உரிமை, தாயக மண்ணுரிமை போன்றவற்றை மீட்பதற்காகவும் உரியவாறு தமிழ்நாட்டில் தமிழர் இன எழுச்சியும் ஒற்றுமையும் உருவாகிவிடவில்லை என்பதைக் கணக்கில் கொண்டு, தமிழர்கள் இப்பகுப்பாய்வைத் திறனாய்வு செய்ய வேண்டுகிறோம்.
பகைக் கட்சிகளும், பாசாங்குக் கட்சிகளும் தமிழர்களைப் பிளவுபடுத்துகின்றன. சாதிக் கட்சிகளும் பிளவுபடுத்துகின்றன. பகை மற்றும் பாசாங்குக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டே, ஈழத்தமிழர் உரிமைக்காகவும், தமிழகத் தமிழர் உரிமைக்காகவும் போராடுவது உரிய பலனைத்தராது.
தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்கான சமூக நீதி, நடைமுறைப் பண்பில் சாதி மறுப்பு உள்ளிட்ட குமூகவியல் கொள்கைகளை புரட்சிகர தமிழ்த்தேசியம் தன்னுள் கொண்டிருக்க வேண்டும்.

பிரியங்கா நளினி சந்திப்பு ஒரு பார்வை



"கடவுளிடம்" கூட கட்டுத் தளையற்று பேசலாம்; ஆனால் காங்கிரசாரிடம் விடுதலைப்புலிகள் பற்றியோ, ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கான மனித உரிமை குறித்தோ பேச முடியாது என்று எழுதப்பாடாத "புனிதக் கட்டளை" போடப்பட்டுள்ளது. வேலூர்ச் சிறையில் நளினியைப் பிரியங்கா காந்தி பார்த்து உரையாடினார். "நேரடிப் பகைவர்கள்" நெருங்கி அமர்ந்து, நிகழ்வுகளைப் பகிர்ந்து, பரிவு காட்டிக் கொண்டார்கள். ராஜீவ் காந்தி கொலையைச் சாக்காக வைத்து, வரலாற்று வழிப்பட்ட தங்களின் இனப்பகையால், தமிழர்களைப் பழிவாங்கத் துடிக்கும் 'துக்ளக்' சோ, சுப்பிரமணிய சுவாமி போன்றோருக்கு இச்சந்திப்பு, அதிர்ச்சியை அளித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீது போலிப் பகைமை காட்டி, காங்கிரஸ் தலைமையை அண்டிப் பிழைக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் போன்ற இனத்துரோகிகளும் அதிர்ந்து போயுள்ளார்கள். 'துக்ளக்' சோவை மதியுரைஞiராகக் கொண்டு செயல்படும் சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார் குழம்பிப்போய் கருத்துக் கூறியுள்ளார். தனிமையில் சந்தித்த போது நளினி, பிரியங்காவை கொலை செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று அவர் பதறுகிறார்.(ஜுனியர் விகடன் - ஏப்ரல் 23, 2008).

ராஜீவ் காந்தி கொலைக்குக் காரணமான வர்களில் ஒருவராகத் தண்டிக்கப்பட்ட நளினியை மரண தண்டனை யிலிருந்து மீட்டவர் ராஜீவின் மனைவி சோனியா காந்தி ஆவார்.

இதனால் சோனியாவுக்குப் 'பதிபக்தி' (கணவர் பக்தி) இல்லையென்று செயலலிதா கண்டித்தார்! சோனியா காந்தி காட்டிய பரிவு, உலகத்தில் நடக்காத புதுமை இல்லை. தமது இரு குழந்தைகளோடு தம் கணவர் ஸ்டெயின்ட்ஸ் பாதிரியார் ஒரிசாவில் இந்துத்வா வெறியர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். பாதிரியாரின் மனைவி அக்கொலையாளிகளை மன்னித்து விட்டதாகச் சொன்னார். பிரியங்கா நளினியைப் பார்த்ததற்கு வேறொரு விளக்கமும் சொல்லப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலையை வைத்து, தமிழ் இனமே காங்கிரஸ் கட்சிக்கு எதிரி இனம் என்பது போல் 1991லிருந்து இன்றுவரை நடந்து கொண்டு விட்டோம்; இதனால் தமிழர்கள் அடிமனதில் காங்கிரஸ் எதிர்ப்பு கனன்று கொண்டுள்ளது; இம்முரண்பாட்டை இணக்கப்படுத்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களிடம் கணிசமான வாக்குகள் பெற வேண்டும் எனக் கருதியே பிரியங்கா – நளினி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்கின்றனர்.

அப்படியே, தேர்தல் உத்தி கருதி இச்சந்திப்பு நடந்திருந்தாலும் அதனால் குற்றமொன்றும் இல்லை. தமிழ் இனத்தை இணக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்து காங்கிரஸ் தலைமையில் தோன்றி இருந்தால், அது, ராஜீவ் கொலைக்குப் பிறகு பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே, அடக்குமுறை களுக்கிடையே சிறைவாசத்துக் கிடையே ஈழ விடுதலையையும் விடுதலைப்புலிகளையும் விட்டுக் கொடுக்காமல் ஆதரித்து வந்த தமிழ் இன உணர்வு அமைப்புகளுக்கும், சான்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி என்று கருதலாம்.

தமிழ் இன உரிமைக்குப் போராடுவோர் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. சோனியா காந்தியும், பிரியங்காவும் தனிநபர்கள் அல்லர்; காங்கிரஸ் கட்சியின் தலைமை ஆவர். அதனால் அவர்கள், தமிழ் இனத்தைத் தனது பகை இனமாகக் கருதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளும் ஆவர். "இந்திய தேசிய" அரசியலில் தனிநபர் குணத்தைவிட, அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் வர்க்க குணமே செயல்படும். இந்த எச்சரிக்கைத் தேவை. அதே வேளை பிரியங்கா - நளினி சந்திப்பை வரவேற்போம்.

நன்றி : கிளர்ச்சியாளன் மே இதழ் 2008

நேப்பாளப் புரட்சியும் நெருக்கடிகளும்




நேப்பாளப் புரட்சியில் வீழ்ந்தது மன்னராட்சி மட்டுமல்ல; நாடாளுமன்ற வாதக் கட்சிகளும்தாம்; அவற்றுள் வலதுசாரிகளும் அடக்கம்; இடதுசாரிகளும் அடக்கம். கடந்த ஏப்ரல் 10-இல் நேப்பாள அரசமைப்பு அவைக்கான தேர்தல் நடந்தது. மன்னர் ஞானேந்திராவின் வளர்ப்புப் பிராணிகளாக அரண்மனையை வலம் வந்து கொண்டிருந்த சூரிய பகது}ர் தாப்பாவின் "ராஷ்ட்ரிய ஜனசக்தி கட்சி ", பசுபதிராணாவின், "ராஷ்ட்ரிய பிரஜா தந்திரக் கட்சி", கமல் தாப்பாவின் "ராஷ்;ட்ரிய பிரஜா தந்திரக் கட்சி-நேப்பாளம்" ஆகியவை இத்தேர்தலில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன.

இக்கட்சிகளின் தலைவர்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அரண்மனையை அனுசரித்து நாடாளுமன்றவாத அரசியல் நடத்திக் கொண்டிருந்த நேப்பாளிக் காங்கிரஸ், ஒருங்கிணைந்த மார்க்சிய – லெனினியக் கட்சி ஆகியவை படுதோல்வி அடைந்தன. நேப்பாளிக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜி.பி.கொய்ராலா தாம் அந்நாட்டின் பிரதமர். அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சுசில் கொய்ராலா தோற்றுப் போனார். பிரதமரின் மகள் சுஜாதாகொய்ராலா, அக்கட்சியின் இன்னொரு முக்கியப் புள்ளி சேகர் கொய்ராலா, அக்கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் கிருஷ்;ண பிரசாத் சித்துவாலா ஆகியோர் வாக்காளர்களால் வீழ்த்தப் பட்டவர்களில் முகாமை யானவர்கள். நாடாளும் அரசபரம்பரைக்கு மட்டுமல்ல, நாடாளுமன்றவாத அரசியல் பரம்பரைக்கும் இத்தேர்தல் வேட்டு வைத்தது.

அரசர் அனுமதித்த நாடாளுமன்றவாத எல்லைக்குள், தனது "புரட்சி" அரசியலுக்குப் புகலிடம் தேடிக் கொண்ட ஒருங்கிணைந்த மார்க்சிய – லெனினியக் கட்சித் தலைவர்களும் இத்தேர்தலில் வீழ்ந்தனர். அக்கட்சியின் தலைவர் மாதவ நேப்பாள் தோற்றார்; அக்கட்சியின் இதர முக்கியத் தலைவர்களும் தோற்றனர். தோல்விக்குப் பொறுப்பேற்று மாதவ நேப்பாள் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
கூட்டணி அமைச்சரவையிலிருந்தும் அக்கட்சி விலகிக் கொண்டது. பழம்பெரும் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டன் மாபெரும் தலைவர்கள் மண்ணைக் கவ்வினர்.

புதிய சக்திகள் எழுந்தன. நேப்பாள மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சி, மாதேசி ஜன அதிகார அமைப்பு ஆகியவை நேப்பாளத்தின் மக்களாட்சி அரங்கத்தில் முதலிரு வெற்றியாளர்களாக மேடை ஏறின.

நேப்பாளம் பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட ஒரு நாடு. புத்தர் பிறந்த லும்பினி அங்கே தான் இருக்கிறது. நேப்பாளி, மைத்திலி, போஜ்புரி பேசும் மக்கள் வாழ்கின்றனர். 1,47,181 ச.கி.மீ.பரப்பு கொண்ட நாடு. 2002 கணக்குப்படி மக்கள் தொகை 2,36,92,000 பேர். அந்நாட்டின் நடுப்பகுதியில் எவரெஸ்ட் மலைச் சிகரம் உள்ளது. சிறுபான்மை பழங்குடிகளாக உள்ள மாதேசி மக்கள், இந்திய எல்லையை ஒட்டிய தெராய்ச் சமவெளியில் வசிக்கின்றனர். இம்மக்கள் தன்னாட்சி கோருகின்றனர். இந்துமதம் பெரும்பான்மை மதம். புத்தம், இஸ்லாம் ஆகியவை சிறுபான்மை மதங்கள்.

இந்து மதம் அரசு மதமாக சட்ட ஏற்பு பெற்றுள்ளது. காஞ்சி சங்கராச்சாரிதான் நேப்பாள அரச குடும்பத்தின் தலைமைக் குரு. அரசர் முடிசூட்டு விழா காஞ்சி சங்கராச்சாரியின் சடங்குகளோடு நடைபெறும். சுருக்கமாகச் சொன்னால், மன்னர் பரம்பரையும் பார்ப்பனியமும் இணைந்த ஓர் அரசு அது மக்களில் பெரும்பாலோர் இந்தோ-ஆரிய நேப்பாளி இன மரபினர். திபெத்திய நேப்பாளி இன மரபினரும் உள்ளனர்.
நேப்பாளத்தின் வணிகத்தைக் கைக்குள் வைத்திருப்பவர்கள் மார்வாரி குசராத்தி சேட்டுகள். இவர்கள் எப்பொழுதும் மன்னர் விசுவாசிகள்; சனநாயக சக்திகளுக்கு எதிரிகள். இந்தியாவுக்கும் நேப்பாளத்துக்கும் இடையே திறந்த எல்லை உள்ளது. கடவுச் சீட்டு, நுழைவு அனுமதி ஆகியவை இல்லாமல் அங்கிருந்து இந்தியா வரலாம். இங்கிருந்து நேப்பாளம் போகலாம். ஆனால் இரு நாடுகளின் நுழைவு வாயிலிலும் சோதனைச் சாவடிகள் உண்டு. நேப்பாள நாணயத்தின் பெயரும் ரூபாய் தான். மன்னராட்சி நிலைத்துப் போன நேப்பாளத்தில் 1990-இல் எழுந்த சனநாயகக் கிளர்ச்சியை ஒட்டி, புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இப்போதுள்ள ஞானேந்திராவின் அண்ணன் பீரேந்திரா அப்போது மன்னர். அந்த அரசமைப்புச் சட்டம் மன்னரின் ஆட்சித்தலைமையை வலியுறுத்தினாலும், அவரது அதிகாரத்திற்கு வரம்பிட்டது.

இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றம்; அவற்றிற்கான தேர்தல்; தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை; அதன் தலைவராகப் பிரதமர் என்ற ஒருவகைச் சனநாயக முறை உருவாக்கப்பட்டது. ஞானேந்திரா மன்னரான பின், தமது வரம்புக்குள் நில்லாமல் தங்கு தடையற்ற மன்னராட்சி முறையை செயல்படுத்தத் தொடங்கினார். இராணுவம், காவல்துறை ஆகியவற்றை ஏவி, சனநாயக அமைப்புகளையும் மக்களையும் கொடுமையாகத் தாக்கினார். ஒடுக்கினார்.

1990-இல் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டப்படி நேப்பாளிக் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. பின்னர் ஒருங்கிணைந்த மார்க்சிய – லெனினியக் கட்சி ஆட்சி நடத்தியது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மிரட்டி உருட்டுவதும், கலைப்பதும் ஞானேந்திராவுக்குப் பொழுதுபோக்கு போல் ஆகிவிட்டது. இவருடைய அட்டூழியங்களை எதிர்த்து முறியடிக்கும் ஆற்றல் நாடாளுமன்றவாதக் கட்சிகளுக்கு இல்லை. இந்த நிலையில் ஏற்கெனவே ஆய்தப் போர் அமைப்பாக வளர்க்கப்பட்டு வந்த நேப்பாள மாவோயிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, மன்னராட்சியின் கொடுமைகளையும், மன்னராட்சியின் கிராமப் புறக்காவல் அரண்களாக விளங்கிய நிலக்கிழமையையும் எதிர்த்துப் போரிட்டது.

மலைகளில் மாவோயிஸ்ட்டுகள் கட்சி செல்வாக்குப் பெற்றது. நேப்பாளத்தின் கிழக்கு மற்றும் மையச் சமவெளியான தெராயில் 2007 முதல் மாதேசி ஜன அதிகார அமைப்பு செல்வாக்குப் பெற்றது.

மன்னர் ஆட்சியை ஒழித்து மக்கள் சனநாயக நேப்பாளத்தை உருவாக்கப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆய்தப் போராட்டம் நடத்தியது மாவோயிஸ்ட்டுக் கட்சி. 2006-இல் ஞானேந்திராவுக் கெதிராக நேப்பாள மக்கள் வெகுண்டெழுந்தனர். இராணுவ அடக்குமுறைகளைத் தகர்க்கும் வகையில் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. அந்த மக்கள் எழுச்சியின் முன்னணிப் படையாகச் செயல்பட்டது மாவோயிஸ்ட்டுக் கட்சி. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்பிறகு அரசியல் நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டி முன்னேறியது அக்கட்சி. மாவோயிஸ்ட்டுக் கட்சி தான் மன்னராட்சி முறை முற்றிலும் நீக்க வேண்டும் என்பதில் முரணின்றி உறுதியாக உள்ளது. அரண்மனையை அனுசரித்து அரசியல் நடத்திப் பழக்கப்பட்ட, நேப்பாளிக் காங்கிரசும், மார்க்சிய லெனினியக் கட்சியும் மன்னராட்சியை நீக்குவதில் உறுதியாக இல்லை. அரசமைப்பு அவைக்கான இத்தேர்தலில் மேற்படி இரு கட்சிகளும் மாவோயிஸ்ட்டுக் கட்சியைக் கூட்டணி சேர்க்கவும் இல்லை. இக்கட்சிகள் அனைத்தும் தனித்தனியே போட்டியிட்டன.


ஆனால் அவை தற்பொழுதுள்ள 7 கட்சி கூட்டணி ஆட்சியில் உறுப்பு வகிக்கின்றன. நேப்பாளத்தில் விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறை உள்ளது. அதன்படி 601 உறுப்பினர்களைக் கொண்ட அவைக்கு 240 இடங்களுக்கு நேரடித் தேர்தல் நடைபெற்றது. எஞ்சியவற்றுக்குக் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாச்சாரத்திற் கேற்ப இடங்கள் வழங்கப்படும். 240-இல் 121 தொகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 601 உறுப்பினர்களில் நேரடித் தேர்தல் மூலம் 240, விகிதாச்சார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவது 335 இடங்கள். ஆகமொத்தம் தேர்தல் மூலம் நிரப்பப்படும் இடங்கள் 575 ஆகும். எஞ்சிய 26 இடங்கள் வாக்கு விகிதத்திற் கேற்ப கட்சிகளின் தலைமையால் நியமனம் செய்யப்படுவன ஆகும். மொத்த வாக்குகளில் 38.2 விழுக்காடு மாவோயிஸ்ட்டு களுக்கு கிடைத்துள்ளது. இதனால் அவையில் கிடைக்கும் இடங்கள் 220. நேப்பாளி காங்கிரசிற்கு கிடைத்த மொத்த இடங்கள் 110. மார்க்சிஸ்ட்டு லெனினிஸ்ட்-103. மாதேசிக் கட்சிகள்- 85 மாவோயிஸ்ட்டுத் தலைவர் பிரசண்டா கூட்டணி ஆட்சிக்கு மற்ற கட்சிகளை அழைக்கிறார். நேப்பாளிக் காங்கிரசும், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியும், கூட்டணியில் சேருமா சேராதாஎன்பது இன்னும் தெளிவாக வில்லை. மாவோயிஸ்ட் கட்சியை தனித்து ஆளவிட்டு, மக்கள் பிரச்சினைகளை அதனால் சமாளிக்க முடியவில்லை எனில் அதை அம்பலப்படுத்தலாம் என்றும் இவ்விரு கட்சிகளும் கருதலாம் என்று அரசியல் நோக்கர்கள் ஊகிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியம் மாவோயிஸ்ட்டு களை ஆட்சி யமைக்க விடக்கூடாதென்று பல்வேறு சதிவேலைகளில் ஈடுபடுகிறது.

ஆட்சியமைத்த பிறகும் சுரண்டும் வர்க்கங்களும் அதன் தலைவர் களும் மன்னரும் சேர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தக் கூடும். மாவோயிஸ்ட்டுகள் அவ்வாறான உள்நாட்டுக் குழப்பத்தை சமாளிக்க வேண்டியிருக்கும். மாவோயிஸ்ட்டுகளின்.

இந்த வெற்றிக்கு காரணங்களாக நாம் பார்ப்பவை:

1.மன்னரின் கொடிய இராணுவ ஆட்சியை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போராடியது.

2.மன்னர் ஆட்சி முறையை ஒழித்து சனநாயக ஆட்சி முறையை உருவாக்க வேண்டுமென்று தடுமாற்ற மில்லாமல் கோரிக்கை வைத்தது: போராடியது.

3.உழைக்கும் மக்கள், ஏழை எளியவர்களுக்கான, மக்கள் சனநாயகப் பொருளியல் திட்டங்களை முன்வைத்தது.

4. நேப்பாளத்தின் இனக்குழுப் பன்மையைப் புரிந்து, ஏற்றுக் கொண்டு கூட்டாட்சி அமைத்திடும் திட்டத்தை முன்வைத்தது.

5.புரட்சியின் மூலம் அரசைக் கைப்பற்றினாலும் பல கட்சி ஆட்சிமுறையைச் செயல்படுத்திட உறுதி அளித்தது. (பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி முறையைக் கைவிட்டது).

6.பார்ப்பனிய மற்றும் சாதி ஆதிக்கங்களை எதிர்த்தது.

7. ஆய்தப் போராட்டம் மூலம் தங்கள் வசம் வந்த நிர்வாகப் பகுதியை தக்கவைத்துக் கொண்டே சமவெளிப் பகுதிகளில் மக்கள் திரள் பேரெழுச்சியை ஏற்படுத்தி அரசைப் பணிய வைத்தது. அதன்
வலுவில் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து, பிறபகுதி செல்வாக்கை அத்துடன் இணைத்தது.

இந்திய அரசின் நிலை

இத்தேர்தலில் இந்திய அரசு, மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நிலை எடுத்து, மேற்கண்ட நாடாளுமன்றவாத வலதுசாரி மற்றும் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்தது. அதற்கான மறைமுக வேலைகளிலும் ஈடுபட்டது. சி.பி.எம். கட்சி இந்திய அரசின் பிரதிநிதி போலவே நேப்பாள அரசியலில் நடந்து கொண்டது. வட அமெரிக்க அரசு, மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான வேலைகளை இத்தேர்தலில் செய்தது. இந்த அளவு மக்கள் ஆதரவைப் பெற்ற பின்னரும் கூட, நேப்பாள மாவோயிஸ்ட் கட்சியை இன்னும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலேயே அது வைத்துள்ளது.

இந்திய அரசுடன் நல்லுறவைப் பேணும் அதே வேளை, 1950- இல் சமத்துவ மற்ற நிலையில் போடப்பட்ட நேப்பாள இந்திய ஒப்பந்தத்தைக் கைவிடுNஆவாம் என்று பிரசண்டா கூறுகிறார்.

எச்சரிக்கை வேண்டும்

கம்யூனிசத் தத்துவம் தோற்றுவிட்டது என்று உலக முதலாளியம் தம்பட்டம் அடித்துவரும் இக்காலத்தில் கம்யூனிச ஒளிச்சுடரை உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்றி வைத்துள்ள நேப்பாளி மக்களையும் நேப்பாள மாவோயிஸ்ட் கட்சியையும் நெஞ்சாரப் பாராட்ட வேண்டும். எதிர்காலத்தில் பல இடையூறுகளைத் தாண்டித்தான் இப்பொழுது கிடைத்துள்ள வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும்.

தமிழ்த் தேசியப் புரட்சியாளர்கள் நேப்பாளப் புரட்சியிலிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும.; அதே நேரத்தில் அதை அப்படியே காப்பிடியக்கக்கூடாது

Wednesday, December 2, 2009

திபெத் விடுதலையை ஆதரிப்பதே மார்க்சிய லெனினியம்


வாழ்ந்து கெட்ட இனங்களின் வரிசையில் திபெத்தியர்களையும் வரலாறு பதிவு செய்துள்ளது. கிறித்து பிறப்பதற்கு இன்னும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் இருக்கின்றபோதே திபெத்தியர்களின் நாகரிகமும் சிந்தனையும் கிழக்கில் ஒளி வீசியது. அவ்வளவு ஏன், புத்தர் பிறப்பதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் கி.மு.1063இல் சென்ராப் மிவோ என்ற திபெத்திய ஞானி சீர்த்திருத்தப்பட்ட "பான்' மதத்தை உருவாக்கினார்.

காஷ்மீர், நேபாளம், பூடான், மியான்மர், சீனா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட திபெத்தின் அசல் பெயர் ""போத்''. இன்றும் திபெத்தியர்கள் தங்கள் நாட்டைப் போத் என்றே அழைக்கின்றனர். கி.மு.127இல் முடி சூட்டிக் கொண்ட மன்னர் நியாத்திரி சென்போ காலத்திலிருந்து ஆயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்ட திபெத்திய அரசர்களின் வரலாறு பதிவாகி யுள்ளது. மன்னர் சாங்சென் கம்போ (கி.பி.62949) ஆட்சிக்காலத்தில் திபெத் மாபெரும் படைவலிமை கொண்ட வல்லரசாகத் திகழ்ந்தது. அவருடைய போர்ப்படை நடு ஆசியக் கண்ட நாடுகளில் வெற்றி நடைபோட்டது.

மன்னர் திரிசாங் டெட்சென் ஆட்சியில் (கி.பி.75597) திபெத்தியப் பேரரசு புகழின் உச்சியில் இருந்தது. அது சீன நாட்டைக் கைப்பற்றியது. அப்போதைய சீனத் தலைநகர் சாங்அன் (இப்போதைய சியான்) நகரத்தை திபெத்தியப் படைமுற்றுகை யிட்டது.

சீனப் பேரரசர் நாட்டை விட்டு ஓடிவிட்டார். புதிய சீனப் பேரரசர் ஒருவøர திபெத்தியர்கள் அமர்த்தினர். இவ்வெற்றியைக் குறிக்கும் கல்தூண் திபெத் தலைநகர் லாசாவில் நடப்பட்டது. அதில் பின்வருமாறு கல்வெட்டு பொறித்தனர். ""மன்னர் திரிசாங் டெட் சென், மகத்தான மனிதர். ஆழ்ந்து அகன்ற பேரறிவாளர். அவர் செய்தவை அனைத்தும் வெற்றிபெற்றன. சீனாவின் பல மண்டலங்களையும் கோட்டைகளையும் கைப்பற்றினார். சீனப் பேரரசர் ஹெகு கி வாங்கையும் அவரது அமைச்சர்களையும் அச்சுறுத்தி வைத்தார். அவர்கள் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் சுருள் பட்டை (சில்க்) (திபெத்துக்கு) கப்பமாகக் கட்டினர்.'' இவ்வாறு பலவெற்றிகளைக் குவித்த திபெத்தியப் பேரரசில் பலபரம்பøரயினர் ஆட்சிக்கு வந்தனர். பலபோர்க்குழுக்கள் உருவாயின. அப்போது புத்தத் துறவிகளின் தலைவராக விளங்கிய பேரறிவாளர் சோனம் கியாஸ்ட்டோ, (பிறப்பு 1543) ஆல்டன் கான் என்ற மன்னøர புத்தமதத்திற்கு மாற்றினார். பல்வேறு போர்க்குழுக்களைத் தமது அறிவுøரயால் இணக்கப்படுத்தினார் சோனம் கியாஸ்ட்டோ. ஆன்மீக வழிப் புத்தமத ஆட்சியை ஆல்டன்கான் நடத்தினார். ""தலாய் லாமா'' என்ற பட்டத்தை ஞானி சோனம் கியாஸ்ட்டோவுக்கு ஆல்டன்கான் சூட்டினார். ""தலாய் லாமா'' என்றால் ""அறிவுக்கடல்'' வாஎன்று பொருள். தம்மை மூன்றாவது ""தலாய் லாமா'' என்று கூறித் தன்னடக்கம் காட்டினார் கியாஸ்ட்டோ. ஆகவே அவருக்கு முன் இருந்து மறைந்த முதலாவது, இரண்டாவது ஆன்மீகத் தலைவர் களுக்கும் தலாய் லாமா என்று பட்டம் சூட்டினர். இறந்த பிறகு வழங்கப்படும் பட்டங்கள் அவை. இந்த வரிசையில் ஐந்தாவது தலாய் லாமா ஆன கவாங் லோசாங் கியாஸ்ட்டோ கி.பி.1642 இல் அரச பதவி ஏற்றார். அவர்தாம் முதல் முதலாகத் தம்மை திபெத்தின் ஆட்சித் தலைவராகவும் ஆன்மீகத் தலைவராகவும் அறிவித்துக் கொண்டவர். இவ்வாறாக மதஅரசர் திபெத்தில் உருவானார். (இப்பொழுது இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் உள்ளவர் 14ஆவது தலாய் லாமா)

ஐந்தாவது தலாய் லாமா, வெவ்வேறு குறுநில மன்னர்களின் கீழ் பிரிந்து கிடந்த திபெத் பகுதிகளை ஒருங்கிணைத்துத் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். ஒருங்கிணைக்கப்பட்டு தனது ஆட்சியின் கீழ் உள்ள திபெத்தின் இறையாண்மையை ஏற்குமாறு அப்போது (17ஆம் நூற்றாண்டில்) சீனத்தை ஆண்ட மிங் பேரரசøரக் கோரினார். சுதந்திர நாட்டின் அரசராகவும் தமக்குச் சமமான வராகவும் ஐந்தாவது தலாய் லாமாவை மிங் பேரரசர் அங்கீகரித்துச் சீனத்தின் தலைநகருக்கு அழைத்தார். தலாய் லாமாவைத் தனித்தேசத்தின் தலைவராக மட்டுமின்றி தெய்வ அருள் பெற்ற வராகவும் சீனப் பேரரசர் ஏற்றார்.

சீனாவில் மஞ்சு பரம்பøரயினர் ஆட்சி ஏற்பட்டது. முதல் முதலாக 1720இல் அன்றைய 6ஆவது இளம் தலாய் லாமாவை காப்பாற்றுவதற்கும் உதவுவதற்கும் என்று கூறிக்கொண்டு சீன மஞ்சு அரசர் திபெத்துக்குப் படை அனுப்பினார். அதன்வழி சீன அரசு, தனது ஆதிக்க அரசியலைத் திபெத்தில் தொடங்கியது. நிரந்தர நிர்வாகி ஒருவøர நியமித்துவிட்டு சீனப்படை திரும்பியது. இளம் தலாய்லாமாவுக்கு உதவியாக நிர்வாகத்தைக் கவனித்து வந்த திபெத்திய அதிகாரியை (ரீஜெண்ட்) சீன நிர்வாகி கொலை செய்துவிட மஞ்சு அரசப் படை களுக்கும் திபெத்தியர் களுக்கும் இடையே சண்டை மூண்டது. இச் சூழலில் கூர்க்கர்கள் திபெத்தின் மீது படையெடுத்தனர். அரசியல் நிலையற்ற தன்மை நீடித்தது. பிரித்தானியர் ஆதிக்கம் சீனாவில் அதிகரித்தது. சீன மஞ்சு அரசர்களின் வழியாக பிரித்தானிய வணிகர்கள் திபெத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நுழைந்தனர். இறுதியாக 1904 ஆகஸ்ட் 3ஆம் நாள் பிரித்தானியப் படை திபெத்துக்குள் நுழைந்து தலைநகர் லாசாவைக் கைப்பற்றியது. அப்போது திபெத்தை ஆண்டு கொண்டிருந்த 13ஆவது தலாய் லாமா மங்கோலியாவிற்குத் தப்பிச் சென்றார். பின்னர் பிரித்தானியருடன் சமரசம் ஏற்பட்டு 1909இல் 13ஆவது தலாய்லாமா திரும்பி வந்து ஆட்சி நடத்தினார். ஆனால் 1910இல் மஞ்சுப் படையினர் திபெத்திற்குள் நுழைந்து போரிட்டனர். தலாய்லாமா லாசாவை விட்டு வெளியேறி பிரித்தானிய இந்தியாவின் உதவியை நாடினார்.

பின்னர் திபெத் மங்கோலியா உடன்படிக்கை அடிப்படையில் தலாய்லாமா திரும்பிவந்து திபெத்தின் இறையாண்மையை நிலை நாட்டி அறிக்கை வெளியிட்டார். 1933 டிசம்பர் 17இல் 13ஆவது தலாய் லாமா இறந்தார். அடுத்த ஆண்டே சீனப்படை திபெத்திற்குள் புகுந்தது. 1949 செப்டம்பரில் சீனப்புரட்சி வெற்றி பெற்று வந்த வேளையில் கம்யூனிஸ்ட் படை திபெத்திற்குள் புகுந்து அதைக் கைப்பற்றியது. 1950 நவம்பர் 17ஆம் நாள் இப்பொழுது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள 14ஆவது தலாய் லாமாவுக்கு திபெத்தின் மத அரசர் பட்டம் சூட்டப்பட்டது. அப்போது அவருக்கு அகவை 16. 1951 மே 23 திபெத்தின் தூதுக்குழு பீகிங் சென்று, திபெத் விடுதலை பற்றி பேச்சு நடத்தியது. அப்போது 17 அம்சஉடன்பாடு ஒன்று ஏற்பட்டது.

அவ்வுடன்படிக்கை இராணுவ மிரட்டலுடன் தங்கள் மீது திணிக்கப் பட்டதாக திபெத் தரப்பு கூறுகிறது. இரு தரப்பு மன ஒப்புதலுடன் செய்யப்பட்டது என்று சீனத் தரப்பு சொல்கிறது. இவ்வொப்பந்தம் திபெத் தன்னாட்சி உள்ள பகுதியாக சீன நாட்டில் நீடிக்கும் என்று கூறுகிறது. திணிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டவற்றைக் கூட சீன அரசு நிறைவேற்றவில்லை என்றும் 1951 செப்டம்பர் 9அன்று ஆயிரக் கணக்கில் சீனப்படையினர் திபெத் துக்குள் நுழைந்தனர் என்றும் தலாய்லாமா தரப்பினர் கூறுகின்றனர்.

அவ்வொப்பந்தம் ஏற்பட்ட பின்னர் தலாய்லாமா சகோதரர்கள் சீனாவுக்கு எதிராகச் சதிபுரிந்தனர் என்று சீனத் தரப்பு கூறுகிறது. சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தில் போராட்டம் தொடங் கியது. 1959 மார்ச்சு 10இல் அப்போராட்டம் திபெத் முழுவதும் வீச்சோடு வெடித்தது. தலைநகர் லாசா பேöரழுச்சி கொண்டது. ஆனால் சீனப்படையினர் நூற்றுக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் சுட்டுக் கொன்றனர். ஏராளமானோர் சிறையிலடைக்கப்பட்டனர். 1959 மார்ச்சு 17இல் இரவோடு இரவாக தலாய்லாமா தப்பிச் சென்று இந்தியாவில் தஞ்சம் கேட்டார். அவர் பின்னால் ஆயிரக்கணக்கான திபெத் தியர்கள் மூட்டை முடிச்சுகளுடன் குழந்தை குட்டிகளுடன் தாயகத்தை விட்டு வெளியேறினர்.

இந்தியாவில் பண்டித நேரு அரசாங்கம், தலாய்லாமாவுக்கும் புலம்பெயர்ந்த திபெத்தியர்க்கும் தஞ்சம் அளித்தது. இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் தலாய் லாமா தங்கி புலம்பெயர்ந்த அரசாங்கம் நிறுவி அதன் தலைவரானார். இந்தியா அந்த புலம்பெயர்ந்த அரசாங்கத்தை அங்கீகரிக்க வில்லை. திபெத்தின் முழு விடுதலையைக் கோரிவந்த தலாய்லாமா பின்னாளில் பாதுகாப்பு, வெளியுறவு தொடர்பான அதிகாரங்கள் பெய்ஜிங்கில் இருக்கட்டும் மற்ற அதிகாரங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட திபெத்தியப் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தன்னாட்சி கேட்டு வருகிறார். இது தொடர்பாக சீன அரசுடன் பேச்சு நடத்தவும் அணியமாக உள்ளதாகக் கூறுகிறார்

ஆனால் சீன அரசோ, திபெத், சீனாவின் ஒரு பகுதி. அது ஓர் உள்நாட்டுச் சிக்கல் அது பற்றி தலாய் லாமாவுடன் பேச முடியாது என்கிறது. தலாய் லாமா தன்னாட்சி என்று கூறுவது அவர்போடும் வெளிவேடம் என்று கூறுகிறது. திபெத் மக்களிடம் விடுதலை வேட்கை நெருப்பாய்க் கனன்று கொண்டுள்ளது. கடந்த மார்ச்சு 10 அன்று தலைநகர் லாசாவில் போராட்டம் வெடித்தது. சீன ஆக்கிர மிப்பாளர்களை எதிர்த்துத் திபெத்தியர்கள் முதல் முதலாக மாபெரும் மக்கள் எழுச்சி தொடங்கிய நாள் 1959 மார்ச் 10. அதன் 50ஆம் ஆண்டு தொடங்கு வதை ஒட்டி இப்பொழுது மீண்டும் கிளர்ச்சிகள் நடக்கின்றன. சீன அரசின் கணக்குப்படி இதுவøர 19 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 385 பேர் காயம் பட்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்களில் காவல்துறை அதிகாரி ஒருவரும் அடக்கம்.

""புனித ஆடை போர்த்திக் கொண்ட ஓநாய்'' என்றும் ""மனித முகம் கொண்ட கொடிய விலங்கென்றும்'' தலாய் லாமாவை திபெத்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜாங் தமது கட்சி ஏட்டில் எழுதியுள்ளார். இவ்வாறான சொற்களைத் தவிர்த்து விட்டு, இதே பொருள்தரும் வகையில் தலாய் லாமாவை சீனவெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் குயின் கூறியுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் நாடு.

திபெத்திய விடுதலை இயக்கத்தை வடஅமெரிக்கா ஆதரிக்கிறது. எனவே மார்க்சியர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்ன நிலை எடுப்பது என்ற வினா முன்னுக்கு வருகிறது. தலாய்லாமாவுக்கு இந்தியா தஞ்சம் கொடுத்து, புலம்பெயர்ந்த அரசாங்கம் தனது மண்ணில் நடத்திக் கொள்ள அனுமதிப்பது சீனாவுக் கெதிரான அரசியல் உத்தியே. அதேபோல் 1960லிருந்து அமெரிக்க ஏகாதிபத்திய அரசு ஆண்டொன்றுக்கு 17 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தலாய் லாமா அரசுக்கு நன்கொடை யாக அளித்து வந்தது என்பதையும் இத்தொகை சி.ஐ.ஏ. வழியாக அனுப்பப்பட்டது என்பதையும் 1998 அக்டோபரில் தலாய்லாமா நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது. கம்யூனிஸ்ட் சீனாவில் தலையிட்டு அதைப் பிளவுபடுத்த அல்லது அங்கு குழப்பங்கள் உண்டாக்க அமெரிக்கா சதித்திட்டம் தீட்டும் என்பதில் எள்ளளவும் ஐயப்பட வேண்டியதில்லை. இதில் நாம் சரியான நிலைப்பாடு வகுக்க வேண்டுமெனில் அசல் சிக்கல் எது, பக்க விளைவு எது என்று பிரித்துப் பார்த்துத்தான் முடிவெடுக்க வேண்டும். அசல் சிக்கல் என்பது, திபெத்திய தேசிய இனத்தின் தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை)தான். லெனினியக் கோட்பாட்டின்படி, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமை. அவ்வுரிமையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும், ஒவ்வொரு
சனநாயகவாதியும் ஏற்க வேண்டும். சீனர்களும் திபெத்தியர்களும் வெவ்வேறு தேசிய இனத்தவர்; வேறு வேறு தேசத்தவர். திபெத் தனிநாடாக இறையாண்மையுடன் விளங்கியதை வரலாறு நெடுக பார்த்தோம். மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி சீனப் புரட்சியை நடத்தும் போது, எதிர்ப் புரட்சி யாளர்கள் தைவானைத் தளமாகக் கொண்டது போல, திபெத்தையும் தளமாகக் கொண்டு புரட்சிக்கெதிரான பன்னாட்டு பிற்போக்காளர் செயற் களமாக மாறலாம் என்ற அச்சத்தில் திபெத்திலும் மக்கள் விடுதலைப் படை நுழைந்து அதைக் கைப்பற்றி யிருக்கலாம்.

ஆனால் புரட்சி நிலை நிறுத்தப் பட்ட பின் அதே காரணத்தைச் சொல்லிக் கொண்டு திபெத்தை, மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டது

பெருந்தேசிய இனவாதம் தவிர வேறல்ல; தனது நாட்டு நலனுக்காக இன்னொரு நாட்டின் இறையாண் மையைப் பறிக்கும் செயலாகும். இந்த அணுகுமுறையில் தன் தேசியவாதம் தெரிகிறதே தவிர பாட்டாளி வர்க்கப் பல்தேசிய வாதம் தெரியவில்லை. இவ்வாறான ஒரு சிக்கலில் லெனின் எப்படி நடந்து கொண்டார் என்பதைப் பார்க்க வேண்டும். ரசியப் புரட்சி 1917 நவம்பர் 7இல் வெற்றி பெற்றது. ஆனால் எதிர்ப் புரட்சி யாளர்கள் உள்நாட்டுப் போøரத் தூண்டி நடத்தினார்கள். அந்த நிலையில் அதே ஆண்டில், ரசியா விலிருந்து பிரிந்து போக வேண்டு மென்று பின்லாந்து கோரியது. அக்கோரிக்கையை ஏற்று அது பிரிந்துபோக அனுமதித்தார் லெனின்.

எனவே, மாவோ தலைமையில் இயங்கிய சீனம் 1959இல் திபெத் துக்குள் படையை அனுப்பி, விடு தலைகோரிய மக்கள் போராட் டத்தை நசுக்கி அந்நாட்டு இறை யாண்மையை தனது எல்லைக் குள் அடக்கியிருக்கக் கூடாது. ஏகாதிபத்தியம் தலையிடுகிறது, சீனாவுக்கு எதிரான தளமாகத் திபெத்தை மாற்ற விரும்புகிறது என்ற சீனத்தரப்பு வாதத்தில் முழுஉண்மை உண்டு. மாட்டின் முதுகில் புண் இருக்கிறது, காக்கை வந்துகாக்கையை விரட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமா என்பதே நாம் எழுப்பும் வினா.

1959 மார்ச்சில் பெரும் படையை திபெத்துக்குள் அனுப்பி, அம்மக்களின் விடுதலைக் கிளர்ச்சியை நசுக்கியது சீனா. தலாய்லாமா ந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார். அதே சிக்கல் 50 ஆண்டு கழித்து மறுபடியும் கிளர்ந்து வருகிறது. திபெத் தலைநகர் லாசாவில் போராட்டம் தொடர்கிறது. 19 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 185 பேர் காயம்பட்டிருக்கிறார்கள். பலநூறு பேர் சிறையிலடைக் கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது சீன அரசு. திபெத் விடுதலைக் கிளர்ச்சி யாளர்களோ நூற்றுக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்ட தாகக் கூறுகிறார்கள். வடஅமெரிக்கா, ஜெர்மனி. பிரான்சு போன்ற நாடுகள் திபெத் விடுதலைக் கிளர்ச்சியை ஆதரிக் கின்றன. ஆகஸ்ட்டில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவைப் புறக்கணிக்கப் போவதாக ஐ÷ராப்பிய நாடுகள் அறிவிக்கின்றன. அடக்கிவைக்கப்பட்டுள்ள தேசம் தண்ணீருக்குள் அமுக்கி வைக்கப் பட்ட பந்துபோல் தான் இருக்கும். சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பந்து தண்ணீருக்கு மேலே வந்துவிடும். மனித உரிமை, தேசிய இன உரிமை, தேச இறையாண்மை ஆகியவற்றை மற்றவர்களை விட மார்க்சிய லெனினியர் அன்றோ அதிகம் மதிப்பர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பாசிச பாணியில் அல்லவா பேசுகிறது. திபெத்திய மக்கள் கிளர்ச்சியை ஒடுக்குகிறது. இதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆங்காங்கை சீனாவுடன் இணைப் பதில் எவ்வளவு பொறுமை காட்டியது! எவ்வளவு காலம் பொறுத்திருந்தது! இத்தனைக்கும் ஆங்காங் சீன மொழி பேசும் சீன மக்களின் தீவாகும். சீனாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். 1949 அக்டோபர் 1இல் சீனப் புரட்சி வெற்றிபெற்று கம்யூனிஸ்ட் கட்சியின் முழு அதிகாரத்தில் சீனா வந்தது.

1949 செப்டம்பரிலேயே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது மக்கள் விடுதலைப் படையை திபெத்துக்குள் அனுப்பி அதைக் கைப்பற்றியது. 1949 அக்டோபர் 1க்குப் பிறகும் ஆங்காங்கைக் கைப்பற்ற சீனக்கட்சி ஏன் படை அனுப்பவில்லை? ஆங்காங் பிரித்தானிய ஏகாதி பத்தியத்தின் வசம் இருந்தது. சீனக்கட்சி தனது படையை அனுப்பினால் பிரிட்டனுடன் பெரும் போர் நடத்தவேண்டி வரும். அப்போர் நீடித்தால் சீனப் பொருளியல் பாதிக்கப்படும்.

புரட்சியின் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு மாறாக, போரில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்று சீனக்கட்சி கருதியிருந்தால் அது தவறில்லை. ஆனால், திபெத், ""வலுவில்லாத எதிரி'',""குட்டிப் பையன்'' என்ற மதிப்பீட்டில் தானே அது வேற்று தேசிய இன தாயகமாக இருந்த போதும் படை அனுப்ப முடிந்தது? வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி முதலாளிய சிந்தனைக்குப் பொருத்தமாக இருக்கலாம். பாட்டாளி வர்க்க சிந்தனைக்கு எவ்வாறு பொருந்தும்? ஆங்காங்கை, இணைத்துக் கொள்வதற்காக பிரிட்டனுடன் சீனா பலமுறை பேச்சு நடத்தி, பத்தாண்டு களுக்குப் பிறகு செயலுக்கு வரக்கூடிய ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி 1998இல் தான்
ஆங்காங் சீனாவுடன் இணைக்கப் பட்டது. அதற்காக சீனா விட்டுக் கொடுத்தவை கொஞ்சநஞ்சமல்ல.ஆங்காங்கில் முதலாளிய அமைப்பு, ஆங்காங் நாணயம் ஆகியவை அப்படியே இருக்கும். ""ஒரு நாடு இரு சமூக அமைப்பு'' என்று இதற்குப் பெயர் சூட்டியது சீனா.

ஆங்காங் தீவினர் நேரடியாக வெளிநாடு களுடன் வணிகம், வணிக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். ஆங்காங் சீனப்படையின் பாதுகாப்பின் கீழ் இருக்கும். இதுபோன்ற அணுகு முறையை திபெத் சிக்கலில் ஏன் சீனா காட்ட வில்லை. ஆங்காங்கில் உள்ளவர்கள் சீனர்களின் ""ஹன்'' தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு இரத்தம் சிந்துவதை சீனா விரும்ப வில்லையா? அதேபோல் தைவானில் வாழ்பவர்களும் ""ஹன்'' இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதனை இணைத்திடப் படை அனுப்பவில்லையா? தலாய் லாமா, திபெத்தைத் தனிநாடாக்கும் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதாக 1990களி லிருந்து அழுத்தம் திருத்தமாகக் கூறிவருகிறார். சீனாவுக்குள் ஒரு தன்னாட்சிப் பகுதியாக திபெத் இருக்கட்டும்; வெளியுறவு, பாதுகாப்பு போன்றவை மட்டும் சீன அரசிடம் இருக்கட்டும் என்கிறார்.

2008 மார்ச்சு 10ஆம் நாள் திபெத்தில் விடுதலைக் கிளர்ச்சி வெடித்த பிறகு தனிநாட்டுக் கோரிக்கையைத் தாம் கைவிட்டு விட்டதாக தலாய் லாமா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். தன்னாட்சிபற்றி சீன அரசுடன் பேச அணிமாயிருக்கிறேன் என்கிறார்; திபெத்தியர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை வலியுத் தினாலோ வன்முறைக் கிளர்ச்சியைத் தொடர்ந்தாலோ அரசியல் துறவறம் பூண்டு விடுவேன் என்றும் தலாய்லாமா எச்சரிக்கிறார். (தி இந்து 26.3.2008) சீன மக்களையும் சீனக் கம்யூனிசத்தையும் எப்போதும் மதிக்கிறேன் என்கிறார். திபெத்தில் போராடுபவர்களில்பெரும்பாலோர் கம்யூனிச சித்தாந்ததைத்த ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் தலாய் லாமா கூறியுள்ளார்.ஐ÷ராப்பிய நாடுகள் பலவும், அமெரிக்காவும் தலாய் லாமாவைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்குமாறு சீனாவை வலியுறுத்துகின்றன. ஆனால் சீனா பேச மறுக்கிறது.கும்பல்'' என்று திரும்பத் திரும்பக் கூறுகிறது.

ஆங்காங்கை இணைக்கக் கடைபிடிக்கப்பட்ட மென்மையான அணுகுமுறை, கனி தானாக விழும்வøர காத்திருந்த பொறுமை, சித்தாந்தச் சமரசம் ஆகியவற்றில் எள்ளளவையும் திபெத் சிக்கலில் காட்டவில்லை. ஏன்? திபெத் சின்னஞ்சிறு தேசம்; அமெரிக் காவுக்கோ பிரிட்டனுக்கோ அது நேரடிக் காலனியாக இல்லை. இவ்வாறு தான் புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்து, அமெரிக்கா திபெத் விடுதலையை ஆதரிக்கிறது; தலாய் லாமா இந்தியாவில் நடத்தும் புலம்பெயர்ந்த அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 17 லட்சம் டாலர் பணம் கொடுத்து வந்திருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம். தேச விடுதலைக்குப் போராடு வோர், எதேச்சாதிகாரிகள், பாசிச ஆட்சியாளர்கள் துணை செய்தால் கூட ஏற்றுக் கொள்வது வரலாற்றில் நாம் பார்க்கும் ஒன்றுதான். எதேச் சாதிகாரிகளுக்கும் பாசிச ஆட்சியாளர்களுக்கும், தங்கள் நலனை உள்ளடக்கிய நோக்கம் ஒன்றிருக்கும், விடுதலை கோருவோர்க்கு விடுதலை கூடி வரவேண்டும் என்ற நோக்கமிருக்கும். இந்திய விடுதலைக்கு இந்திய தேசியப் படை நிறுவிப் போராடிய சுபாஷ்சந்திர போஸ், இட்லர், முசோலினி, டோஜோ ஆகிய பாசிச, நாஜிச, இராணுவ சர்வாதிகார சக்திகளின் துணையை நாடி அவர்களுடன் கூட்டணி சேர்ந்தார். அதற்காக சுபாஷ் சந்திர போசை பாசிஸ்ட்டுகளின் கைக்கூலி என்று கருதலாமா? அவ்வாறு கருதக்கூடாது. போஸின் அந்த உத்திமீது விமர்சனம் இருப்பது தவறல்ல. ஆனால் அவரது இலட்சிய வேட்கையை, நேர்மையைக் கொச்சைப்படுத்தக் கூடாது.

இராக், துருக்கி நாடுகளில் வாழும் குர்திஷ் தேசிய இனமக்கள் விடுதலைக்குப் போராடுகிறார்கள். அவர்களின் தலைவர் ஓசலான் துருக்கி சிறையில் உள்ளார். சதாம் உசேன் காட்டுமிராண்டித்தனமாக குர்திஷ் விடுதலை இயக்கத்தையும் அம்மக்களையும் ஒடுக்கினார்; நசுக்கினார். இப்பொழுது ஈராக்கை ஆக்கிரமித்து சதாமைத் தூக்கில் போட்ட அமெரிக்க வல்லரசுடன் இணக்கம் கண்டு ஒருவகைத் தன்னாட்சி பெற்றுள்ளனர் குர்திஷ் மக்கள்.

சமூக முரண்கள் ஒரே பாணியில் தீர்வு காண்பதில்லை. வரலாறு வளைந்தும் நெளிந்தும் சுழன்றும்முன்னேறுகிறது. இலட்சிய மலையின் கொடுமுடியை தொடுவதற்கு ஏறிச்செல்லும் கதாநாயகன் தன் தோள்களில் கொள்கைகளையும் கொஞ்சம் அழுக்கு மூட்டைகளையும் சுமந்தே செல்கிறான். தலாய்லாமாவை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஐ÷ராப்பிய நாடுகள் ஆதரிக்கின்றன, இந்தியா அவருக்கு இடங்கொடுக்கிறது என்பதற்காக திபெத்தியர்களின் தேசிய விடுதலை இயக்கத்தை ஒரு சனநாயகவாதியோ அல்லது மார்க்சிய÷ரா எதிர்க்கக் கூடாது. ஆதரிப்பவர் அல்லது எதிர்ப்பவர் யார் என்று பார்த்து ஒரு சிக்கலுக்குத் தீர்வு கூறுவதைவிட அசல் சிக்கல் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தீர்வு கூற வேண்டும். உள்ளதை உள்ளபடி பார்க்க வேண்டும். திபெத் சிக்கல் சீனாவின் உள்நாட்டுச் சிக்கல் என்று கூறுவது. பாலஸ்தீனச் சிக்கல் இஸ்÷ரலின் உள்நாட்டுச் சிக்கல் என்று யூத வெறியர்கள் கூறுவது போன்றது தான்; ஈழச்சிக்கல் உள்நாட்டுச் சிக்கல் என்ற சிங்களப் பேரினவாத அரசு கூறுவது போன்றதுதான். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (அப்போது எம்.சி.பி.ஐ.) 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ""கண்ணோட்டம்'' இதழில் எழுதிய கட்டுøரயில் திபெத்தியர்களுக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை உண்டு என்று கூறியுள்ளது. அப்பொழுது, தலாய் லாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை யொட்டி விவாதம் நடந்தது.

அன்றே த.தே.பொ.க. தனது தெளிவான தேசிய இனக்கொள்கையை வெளிப் படுத்தியது. திபெத்தை விட்டு சீன ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தை உலகெங்குமுள்ள சனநாயக வாதிகளும் மார்க்சியர் களும் முழங்க வேண்டும்.

காவிரித் தீர்ப்பும் களவு போன உரிமையும்



நாற்புறமும் பகைவர் சூழ நடுவில் சிக்கிக் கொண்டுள்ளது தமிழினம். மேற்புறத்தில் கன்னடர்கள், கீழ்ப்புறக் கடலில் சிங்களர், தென்மேற்கில் மலையாளிகள், வடக்கே தெலுங்கர்@ உச்சந்தலையிலோ தில்லியர்.

இந்த எதிரிகளுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் தமிழினத்திற்கு இருக்கிறதா ? முகம் கொடுப்பதென்ன, எதிரிகளை முறியடிக்கும் ஆற்றலே தமிழினத்திற்கு உண்டு. ஆனால்...

மயக்கத்தில் ஒரு பகுதி, உறக்கத்தில் ஒரு பகுதி, குழப்பத்தில் சிறு பகுதி, கொந்தளிப்பில் மறுபகுதி@ இதுவே இன்றையத் தமிழ் இனத்தின் நிலை.

தமிழர்களுக்குக் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் தலைவர்கள் இல்லை. உண்மையைச் சொல்வதெனில், அரசியல் அனாதையாகத் தமிழினம் இன்றுள்ளது. புரட்சிகரத் தமிழ்த் தேசியம் இப்பொழுது தான் முகிழ்த்து வருகிறது. போதிய வலிவினை இனிமேல் தான் அது பெற வேண்டும்.

தண்ணீரின் அருமையைக் கூட அறிய முடியாத வகையில் தமிழ் மக்களைத் தேர்தல் அரசியல், உறக்கத்திலும் மயக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. நீர்இன்று அமையாது உலகெனின், யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. -திருவள்ளுவர்

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தோடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே - குடபுலவியனார், புறநானூறு -18

இப்பொழுது பெட்ரோலுக்காக ஈராக்கில் படையெடுத்திருக்கிறது அமெரிக்க ஐக்கிய நாடுகள். அமெரிக்காவின் அக்கம் பக்கம் உள்ள நாடல்ல ஈராக். பத்தாயிரம் கிலோமீட்டருக்கு மேல், தொலைவுள்ள ஈராக்கின் மீது படையெடுத்து, தனது நாட்டிற்கு பெட்ரோலியத்தைக் கொள்ளையிட்டுச் செல்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஏராளமாக பெட்ரோல் கிடைக்கிறது. அதை எடுக்காமல் சேமிப்பில் வைத்துள்ளது அந்நாடு. எதிர்காலத் தேவைக்கு அந்த இருப்பு இன்றியமையாததாம்.

வருங்காலத்தில் ஒரு நாட்டின் தண்ணீர் வளத்தைக் கைப்பற்றுவதற்காக நாடுகளுக்கிடையே போர் நடக்கும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுகிறார். அப்போர் அணுஆயுதப் போராக இருக்கும் என்று எச்சரிக்கிறார். இக்கருத்தைத் தமிழ்நாட்டு வெலிங்கடன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 24.02.2007 அன்று பேசியுள்ளார்.(தினமலர் 25.02.2007).

'முதல் உலகப் போர் நாடுகளைப் பிடிப்பதற்கு நடந்தது. இரண்டாவது உலகப் போர் அரசியல் கொள்கைகளுக்காக நடந்தது. அண்மையில் நடந்த ஈராக் போர் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற நடந்தது. எதிர்காலத்தில், தண்ணீர், எண்ணெய், இயற்கை வாயு, தங்கம், யுரேனியம், தோரியம் போன்ற வளங்களைக் கைப்பற்றவும் போர் நடக்கும்."

'இந்தப் போரில் அணு ஆயுதங்களின் பயன்பாடே மிக அதிக அளவில் இருக்கும். மேலும், கொள்ளை நோயை உண்டாக்கும் கிருமிகளை வெளியேற்றுவது, மனித உயிரைப் பறிக்க ரசாயனங்களைப் பயன்படுத்துவது போன்றவை முக்கியமானவை" குடியரசுத் தலைவரின் எச்சரிக்கையைப் படிக்கும் போதே, நம் எதிர்காலத் தலை முறையினர் என்ன பாடுபடப் போகின்றார்களோ, என்ன ஆகப் போகிறார்களோ என்ற கவலை மனதைக் கவ்விக் கொள்கிறது.

காலங்காலமாகக் காவிரியில் தமிழர்க்கிருந்து வந்த உரிமையைக் கருவறுக்கும் வகையில் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வந்த பின்னும், எதுவுமே நடக்காதது போல் நம் தமிழ் மக்கள் இருப்பது நமது கவலையை மேலும் அதிகப்படுத்துகிறது.

மக்களைக் குற்றம் சொல்வது சரியல்ல. ஊடகங்களும் கட்சித் தலைமைகளும் கட்சி ஏடுகளும் தவறான தகவல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தன@ தந்து கொண்டுள்ளன. காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய 5.02.2007 அன்று காலையிலிருந்தே தில்லி ஆங்கிலத் தொலைக் காட்சிகளான என்.டி.டிவி, சி.என்.என்- ஐ.பி.என் போன்றவை, 'இன்று காவிரித் தீர்ப்பு: எதிர்பாருங்கள்-சிறப்புச் செய்திகள்" என்று அறிவித்துக் கொண்டிருந்தன. தமிழ்த் தொலைக்காட்சிகளில் மக்கள் தொலைக்காட்சியைத் தவிர மற்றவை இதை கண்டு கொள்ளவே இல்லை. அன்ற பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனே மேற்கண்ட ஆங்கிலத் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு, அது தொடர்பான நேர்காணல்களை ஒளிபரப்பின. கர்நாடகாவில் பெங்களுர்-மைசூர் ஆகிய இடங்களிலிருந்து நேர்காணல்களை- மக்கள் பிரதிபலிப்புகளை நேரடியாக ஒளிபரப்பின. தமிழ் நாட்டிலிருந்தும் சில நேர்காணல்களை நேரடி ஒளிபரப்புச் செய்தன.

தமிழகத்திற்கு 419 ஆ.மி.க(ஆயிரம் மில்லியன் கனஅடி - வு.ஆ.ஊ), கர்நாடகத்திற்கு 270 ஆ.மிக, புதுவைக்கு 7 ஆ.மி.க என்று அவை செய்தி வெளியிட்டன. அப்போது தமிழ்த் தொலைக்காட்சிகளான சன், ஜெயா, ராஜ் போன்றவற்றில் திரைப்படம், தொடர்கதைகள், கூத்து கும்மாளம் என்று நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. இது பற்றி செய்தி அலசல் நடத்திய மக்கள் தொலைக்காட்சி தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டியது 419 ஆ.மி.க. என்ற கருத்திலேயே விவாதம் நடத்திக் கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட தலைவர்களும் அதே கருத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.

2.30 மணிக்கெல்லாம், தமிழகத்திற்குக் கர்நாடகம் தரவேண்டியது 192 ஆ.மி.க. என்றும் அதில் 7 ஆ.மி.க. வை தமிழகம் புதுவைக்குத் தர வேண்டும் என்றும் மேற்படி ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. சற்றேறக் குறைய 4 மணிவாக்கில் தான் மக்கள் தொலைக்காட்சி அலசலில் 192 ஆ.மி.க. என்ற விவரம் பேசப்பட்டது. இக்கட்டுரையாளரிடம் தொலைபேசி வழி கருத்துக் கேட்ட போது, 'இது மோசடித் தீர்ப்பு" என்று கூறினார். 'இத்தீர்ப்பை எதிர்த்து நாளையும் நாளை மறுநாளும், சென்னை, சிதம்பரம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், மதுரை, கோவை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் த.தே.பொ.க மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்" என்றார். சிறிது நேரம் கழித்து மருத்துவர் இராமதாசின் தொலைபேசி நேர்காணல் ஒளிபரப்பானது. அதில் அவர் தெளிவாக 192 ஆ.மி.க என்றும், இது குறைவானது என்றும் கூறினார்.

சன் தொலைக்காட்சியில் 419 ஆ.மி.க தமிழகத்திற்கு என்ற செய்தியைத் தொடர்ந்து போட்டுக் கொண்டிருந்தார்கள். தீர்ப்பு வந்த போது, தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தில்லியில் இருந்தார். அவருடைய கருத்து தொலைக்காட்சிகளில் வந்தது. 'ஞாயத்தீர்ப்பு@ ஆறுதல் அளிக்கிறது" என்றார். அப்போது முதல்வருடன் தில்லியில் இருந்த தமிழகப் பொதுப்பணி அமைச்சர் துரைமுருகன், 'மகிழ்ச்சி, மகி;ழ்ச்சி" என்று ஆனந்தக் கூத்தாடினார். மறுநாள் காலை வந்த தினத்தந்தியில் தலைப்பில் கொட்டை எழுத்தில் 'காவிரியில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி" என்றும் அதன் கீழே அதை விட சிறிய எழுத்தில் கர்நாடகம் தர வேண்டியது 192 டி.எம்.சி என்றும் செய்தி வெளியி;டப்பட்டது. சி.பி.எம் நாளிதழான தீக்கதிர் 'தமிழகத்திற்கு 419 டி.எம்.சி தண்ணீர்" என்று எட்டுக் கலக் கொட்டைச் செய்தி வெளியிட்டது. அதே போல் சி.பி.ஐ ஏடான ஐனசக்தி 'தமிழகத்திற்கு 419 டி.எம்.சி" என்று முதல் பக்கத் தலைப்புச் செய்தி வெளியிட்டது.

தினமணி 'தமிழகத்துக்கு 192 டி.எம்.சி" என்றும், தினமலர் 'தமிழகத்துக்கு 185 டி.எம்.சி" என்றும் செய்தி வெளியிட்டன.

இன்றுவரை தமிழக முதல்வரும் பொதுப்பணி அமைச்சர் துரைமுருகனும் காவிரித் தீர்ப்பு ஞாயமானது என்றும், கர்நாடகத்திற்குத் தான் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்றும் கூறிக் கொண்டுள்ளனர். 'இத்தீர்ப்பு தமிழ்நாட்டிற்குப் பாதகமானது@ உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்@ இப்பொழுது கொடுத்ததை நடைமுறைப்படுத்தச் சொல்ல வேண்டும்" என்று, காலதாமதமாக 7.02.2007 அன்று ஒருநாள் மட்டும் காரசாரமான அறிக்கை வெளியிட்டதோடு அமைதியாகிவிட்டார் ஜெயலலிதா.
'நடுநிலையில் வழங்கப்பட்ட தீர்ப்"பென்று சி.பி.ஐ செயலாளர் தா.பாண்டியன் நாக்குத் தெறிக்க ஒலித்தார். சி.பி.எம், இத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கூறியது. திருமாவளவன் கலைஞர் நிலைபாட்டுடன் முரண்பாடு வந்துவிடாமல், 'இத் தீர்ப்பை செயல்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்" என்று கூறினார். தமிழகக் காங்கிரசும் இதே பாணியில் தான் பேசியது.

ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இவ்வாறு, மயக்கத்தையும் குழப்பத்தையும் ஊட்டினால் மக்கள் என்ன செய்வார்கள்? உழவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள்? எனவே தான் மக்களைக் குறை சொல்வதில் பயனில்லை என்கிறோம்.

தீர்ப்பின் சாரம் என்ன ? காவிரியில் கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகியவற்றுக்குக் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. கர்நாடகத்தில் ஏமாவதி, ஏரங்கி, கேரளத்தில் உற்பத்தியாகி வரும் கபினி போன்ற காவிரித் துணை ஆறுகளின் நீரும், தமிழகத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய துணை ஆறுகளின் நீரும் சேர்த்து காவிரியின் மொத்த நீர் 740 ஆ.மி.க என்று நடுவர் மன்றம் கணக்கிட்டது.
அதாவது தலைக்காவிரியிலிருந்து தமிழக அணைக்கரை வரை காவிரியில் சேரும் மொத்த நீர் இது. இது 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது. சார்புத் தன்மை என்பது என்ன? 100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் 50 ஆண்டுகள் எந்தக் குறிப்பிட்ட அளவுக்கு சமமாக அல்லது சற்றுக்கூடுதலாக நீர் வந்ததோ அந்தக் குறிப்பிட்ட அளவு 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்டது. இவ்வாறான 50 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட அளவானது 740 ஆ.மி.க. இதன் பொருள் ஓர் ஆண்டு மொத்த நீர் 740 ஆ.மி.க கிடைக்கும். அதன் அடுத்த ஆண்டில் அந்த அளவு தண்ணீர் கிடைக்காது என்பதாகும். ஓர் ஆண்டு விட்டு ஓர் ஆண்டில் தான் 740 ஆ.மி.க. தண்ணீர் காவிரியில் கிடைக்கும்.

75 விழுக்காடு சார்புத் தன்மை என்பது: 100 ஆண்டுகளில் ஓடிவந்த நீரில் எந்தக் குறிப்பிட்ட அளவுக்குச் சமமாக அல்லது சற்று கூடுதலாக 75 ஆண்;டுகள் தண்ணீர் கிடைத்ததோ அந்த குறிப்பிட்ட அளவு 75 விழுக்காடு சார்புத் தன்மை உடையதாகும். இவ்வாறான 75 விழுக்காடு சார்புத் தன்மை கொண்ட தண்ணீர் அளவு 671 ஆ.மி.க. இதன் பொருள் 100 ஆண்டுகளில் 75 ஆண்டுகள் 671 ஆ.மி.க. அல்லது சற்றுக்கூடுதலாக தண்ணீர் ஓடிவந்தது என்பதாகும். அதாவது 4 ஆண்டுகளில் மூன்றாண்டுகள் மேற்கண்ட அளவு தண்ணீர் கிடைக்கும். ஓராண்டு அதைவிடக் குறைவாகத் தண்ணீர் கிடைக்கும்.
இந்திய அரசு 1972 சூன் மாதம் அமைத்த காவிரி உண்மை அறியும் குழு, கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 50 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் மொத்த நீர் 740 ஆ.மி.க. என்றும், 75 விழுக்காட்டு சார்புத் தன்மையில் கிடைக்கும் நீர் 671 ஆ.மி.க. என்றும் முடிவு செய்தது. நடுவர் மன்றம், 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு 740 ஆ.மி.க. என்று தீர்மானித்தது. அவ்வழக்கில் தமிழ்நாடு, 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொள்ளும்படி வற்புறுத்தியது. ஆனால் நடுவர் மன்றம் அதை ஏற்காமல், ஓராண்டில் 740-ம் அடுத்த ஆண்டில் அதைவிடக் குறைவாகவும் வரக்கூடிய 50 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டது. இது கர்நாடகத்தின் கருத்துக்கு இணக்கமானது.

1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் 75 விழுக்காட்டு சார்புத் தன்மையை எடுத்துக் கொண்டு மொத்த நீர் 671 ஆ.மி.க. என்று முடிவு செய்திருந்தது. இதில் 489 ஆ.மி.க. தமிழகத்திற்கும், 177 ஆ.மி.க. கர்நாடகத்திற்கும், 5 ஆ.மி.க. கேரளத்திற்கும் ஓதுக்கியது. 1924 ஒப்பந்தம் ஞாயமானதே என்பதை 1972-ல் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு அளித்த புள்ளிவிவரங்கள் மெய்ப்பிக்கின்றன.

சார்புத் தன்மை : 50 மூ
மொத்த நீர் : 740 ஆ.மி.க

1934-1972 வரை மேட்டூர் வந்த சராசரி : 376.8 ஆ.மி.க.
கர்நாடகம் பயன்படுத்திக் கொண்ட சராசரி : 155.6 ஆ.மி.க.
கேரளம் பயன்படுத்திக் கொண்ட சராசரி : 3.0 ஆ.மி.க.
----------------------------
540.4 ஆ.மி.க.
தமிழ்நாட்டில் மேட்டூருக்குக்
கீழ் கிடைத்த நீர் : 196.6 ஆ.மி.க.
----------------------------
737.0 ஆ.மி.க.
----------------------------

தமிழ்நாடு மொத்தம் பயன்படுத்திக் கொண்ட சராசரி நீர் : 573.4 ஆ.மி.க.

தமிழ்நாட்டில் காவிரிப் பாசனம் பெற்ற மொத்த நிலப்பரப்பு : 25,30,000 ஏக்கர்

கர்நாடகம் 177 ஆ.மி.க. வரை பயன்படுத்திக் கொள்ள உரிமை இருந்தும் அதனால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது 155.6 ஆ.மி.க. மட்டுமே. காரணம் அம்மாநிலம் மலைப்பகுதி நிறைந்தது@ வேளாண் வளர்ச்சி கன்னடர்களிடையே மிகவும் பிற்காலத்தில் தான் தொடங்கியது.

உண்மை அறியும் குழு புள்ளி விவரத்தில் தமிழகப் பாசனப்பரப்புப் பகுதிகள் சில சேர்க்கப்படவில்லை. சிறுபாசன விரிவாக்கங்களையும் சேர்த்து இப்பொழுது தமிழ்நாட்டில் நடைமுறையில் காவிரி பாசனப்பரப்பு 29,30,000 ஏக்கர் உள்ளது. இது நடுவர் மன்றத்தில் தமிழகம் முன்வைத்துள்ள கணக்கு.

மேட்டூர் அணை 1934-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் 50வது ஆண்டுவிழா 1984-இல் கொண்டாடப்பட்டது. 1974-ஆம் ஆண்டிலிருந்தே 1924 ஓப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகக் கர்நாடகம் வல்லடி வழக்கு பேசி, தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிட மறுத்துவிட்டது.

அப்படி இருந்தும் 1934-84 இடையே உள்ள 50 ஆண்டுச் சராசரி நீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்ததைக் கணக்கிட்டார்கள். அது ஆண்டுக்கு 361.3 ஆ.மி.க. (சான்று: வுhந ஐசசபையவழைnநுசய - மேட்டூர் பொன்விழா மலர், தமிழகப் பொதுப்பணித் துறை-1984)

மொத்த நீர் 740 ஆ.மி.க. என்றால் தமிழகத்திற்குக் கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய நீர் 376.8 ஆ.மி.க.(1972 வரை), 361.3 ஆ.மி.க. (1984 வரை)

ஆனால் நடுவர் மன்றம் 740 ஆ.மி.க மொத்த நீர் என்று கூறிவிட்டு வெறும் 192 ஆ.மி.க நீர் கர்நாடகம் தந்தால் போதும் என்று கூறியுள்ளது. 1972-இல் இருந்ததைவிட 184.8 ஆ.மி.க. குறைத்துவிட்டது. நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைத்திருக்கும் தீங்கு கொஞ்ச நஞ்சமா? திருத்திக் கொள்ளக் கூடிய தவறா? இட்டு நிரப்பக் கூடிய இறக்கமா? அதல பாதாளத்தில் தமிழகத்தை தள்ளிவிட்டுள்ளது நடுவர் மன்றம்.

இதை நியாயத் தீர்ப்பு என்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி! ஆறுதல் அளிக்கிறது என்று கூறுகிறார்@ மறு ஆய்;வு மனுச் செய்து சிற்சில குறைகளைப் போக்கிக் கொள்ளலாம் என்கிறார்.

நடுவர் மன்றம் கர்நாடகத்திற்கு வாரி வழங்கியது எவ்வளவு? 270 ஆ.மி.க. 1972-இல் உண்மை அறியும் குழு கண்டறிந்த படி கர்நாடகம் பயன்படுத்திய நீர் 155.6 ஆ.மி.க. இது 740 ஆ.மி.க. மொத்த நீருக்கான கணக்கு.

ஆனால் நடுவர் மன்றம் 114.5 ஆ.மி.க கூடுதலாகச் சேர்த்து 270 ஆ.மி.க. வை வழங்கியுள்ளது.

நடுவர் மன்றம் லாட்டரிக் குலுக்கல் போல் 'கன்னடர்களுக்கு பம்பர் பரிசு" வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் அதையும் எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள். ஓரு சொட்டுத் தண்ணீர்கூடத் தமிழகத்திற்குத் தரக்கூடாது என்பது தான் கன்னடர்களின் கட்சி.

நடுவர் மன்றம் திட்டமிட்டே மோசடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருடர்கள் திருடும் அவசரத்தில் சில தடயங்களை விட்டுச் செல்வது போல் நடுவர் மன்றம் தனது அநீதியை அடையாளம் காட்டக்கூடிய தடயங்களை விட்டு வைத்துள்ளது.

நடுவர்மன்றக் கணக்கின்படி மொத்த நீர் 740 ஆ.மி.க.

இதில் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.கவும் தவிர்க்க முடியாமல் கடலில் கலக்கும் நீராக 4 ஆ.மி.கவும் சேர்த்து மொத்தம் 14 ஆ.மி.கவை கழித்துவிட்டு 726 ஆ.மி.கவை மட்டுமே நான்கு மாநிலங்களுக்கும் பங்கிட்டுள்ளது.

தமிழ்நாடு 419 ஆ.மி.க.
கர்நாடகம் 270 ஆ.மி.க.
கேரளம் 30 ஆ.மிக.
புதுவை 7 ஆ.மி.க.
-----------------------
மொத்தம் 726 ஆ.மி.க.
-----------------------

கழிக்கப்பட்ட 14 ஆ.மி.க. யாருக்காகக் கழிக்கப்பட்டது? தமிழகத்திற்காக! தமிழகச் சுற்றுச்சூழலுக்கு 10 ஆ.மி.க. என்றும், தமிழக அணைக்கரைக்குக் கீழே, தவிர்க்க முடியாமல் தப்பிச் சென்று கடலில் விழும் நீருக்காக 4 ஆ.மி.க. என்றும் நடுவர் மன்றம் கூறியுள்ளது. இந்த 14ஐ தமிழ்நாட்டு ஓதுக்கீட்டுடன் சேர்த்து 192 + 14 ஸ்ரீ 206 ஆ.மி.க. என்று கணக்கிட்டிருந்தால் சரி. ஆனால் அந்த 14 ஆ.மி.கவை ஓதுக்கீடு (சுநளநசஎந) செய்வதாக தீர்ப்புப் பிரிவு ஏ கூறுகிறது. அது எங்கே வைக்கப்படுகிறது? அதை நடுவர் மன்றம் நேரடியாகச் சொல்லவில்லை.

தமிழகத்திற்குக் கர்நாடகம் தரும் 192 ஆ.மி.கவில் சுற்றுச்சூழலுக்கான 10 ஆ.மி.க இருக்கிறது. அது போக 182 ஆ.மி.க தான் கர்நாடகம் தமிழகத்திற்குத் தரும் நீர் என்று நடுவர் மன்றத் தீர்ப்புப் பிரிவு ஐஓ கூறுகிறது. இந்த 10 ஆ.மி.கவையும் கடலில் கலக்கும் 4 ஆ.மி.கவையும் மொத்த நீரில் கழித்துவிட்டு தான் (740-14)-726 ஆ.மி.க பங்கிடப்படுகிறது.

கூட்டல் கணக்கில் சேராத இந்த 14 ஆ.மிக கர்நாடகத்திற்கே மறைமுகமாக ஓதுக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற மோசடியைப் பாமரர்களும் கண்டுகொள்ள அதுவிட்டுச் சென்றுள்ள தடயம் இந்த 14 ஆ.மி.கவாகும். இதையும் சேர்த்தால் கர்நாடகத்திற்கு (270+14) - 284 ஆ.மி.க. ஓதுக்கீடு ஆகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி நடுவர் மன்றம் கூறியதையும் விஞ்சி, எஜமானனை விஞ்சிய விசுவாசத்தோடு ஒரு குழப்படிக் கணக்குப் போடுகிறார். தமிழகத்தின் பெயரைச் சொல்லி ஓதுக்கிவிட்டு, கர்நாடகத்திற்காகப் பதுக்கி வைத்துள்ள 14 ஆ.மி.க. பற்றி கலைஞருக்குக் கவலையில்லை. அந்த 192 ஐ, அப்படியே கர்நாடகம் தர வேண்டும் என்று தீர்ப்பைத் தாண்டி பேசுகிறார். அது மட்டுமல்ல, பில்லிகுண்டுவிலிருந்து மேட்டூர் வரை, 25 ஆ.மி.க. தண்ணீர் கிடைக்க வாய்ப்புண்டு என்று நடுவர் மன்றம் கூறிய கருத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டு, மேட்டூருக்கு 217 ஆ.மி.க. தண்ணீர் வரும்@ இதில் 7 ஆ.மி.க. புதுவைக்குப் போனால், 210 ஆ.மி.க. மேட்டூரில் நமக்குக் கிடைக்கும் என்கிறார். இடைக்காலத் தீர்ப்பில் 6 ஆ.மி.க. புதுவைக்குப் போக தமிழகத்திற்கு 199 ஆ.மி.க. கிடைத்தது இறுதித் தீர்ப்பில் அதைவிட 11 ஆ.மி.க. கூடுதலாகக் கிடைத்துள்ளது என்று நீட்டி முழக்குகிறார்.
தமிழக அரசு நடுவர் மன்றத்தில் வாதாடியதற்கு நேர் எதிராகக் கலைஞர் இந்தக் கணக்கைச் சேர்க்கிறார். ஓரு முதலமைச்சர் நீதிமன்றத்தில் வாதாட ஒரு முகமும், மக்களிடம் பேச வேறொரு முகமும் கொண்டிருந்தால் எது அசல் முகம், எது முகமூடி, என்று எப்படிக் காண்பது?

இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தரவேண்டிய 205 ஆ.மி.க நீரை மேட்டூரில் தான் அளக்க வேண்டும். பில்லிகுண்டுலுவில் அல்ல. இறுதித் தீர்ப்பிலும் இதே போல் மேட்டூரில் அளக்கம் தீர்ப்பளிக்கும்படி நடுவர் மன்றத்திடம் கோரியது தமிழக அரசு. அதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள்:
1. பில்லிகுண்டுலுவில் 24மணிநேரமும் அளவெடுக்கும் ஏற்பாடு இல்லை. ஒரு நாளில் காலை மாலை மட்டுமே அளவெடுத்து ஒரு நாள் சராசரி வரத்து கணக்கிடப்படுகிறது. அக்குறிப்பிட்ட இருவேளைகளில் உரிய நீரைவிட்டு விட்டு, மற்ற நேரங்களில் கர்நாடகம் குறைத்து தண்ணீர் திறந்து விட்டால், அதைக் கண்டு பிடிக்க முடியாது. பில்லிகுண்டுலுவில் அளப்பது இந்திய அரசின் நீர்வள ஆணையம். மேட்டூரில் எனில் அணை நீர் உயர்வதையும் கணக்கிட்டு, தமிழக அரசின் நேரடி அளவையையும் கணக்கிட்டு வந்து சேரும் நீரைத் துல்லியமாக அளக்க முடியும்.
2. பில்லிகுண்டுலுவிலிருந்து சற்றேறக் குறைய 60 கி.மீ தொலைவில் மேட்டூர் உள்ளது. இதற்கிடையே தண்ணீர் சேதாரமும் ஏற்படும்.
3. பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரையிலான தொலைவில் பெரிதாக மழை நீர் சேர்ந்திட வாய்ப்பில்லை.
4. நடுவர் மன்றம் 1991-இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் படி 1991-92 முதல் 2005-2006 வரை பில்லிகுண்டுலுவில் எடுத்த அளவு நீர் மேட்டூர் வரும் போது குறைந்துள்ளதைப் பின்வரும் பட்டியல் காட்டுகிறது.

பில்லிகுண்டுலு மேட்டூரில எண் அளவு(ஆ.மி.க) அளவு (ஆ.மி.க)
1991-92 340.00 334.96
1992-93 358.61 351.693.
1993-94 230.39 223.374.
1994-95 394.00 373.165.
1995-96 195.51 183.096.
1996-97 245.75 244.057.
1997-98 277.06 268.058.
1998-99 260.40 237.279.
1999-2000 273.68 268.6010.
2000-2001 319.26 306.2011.
2001-2002 189.94 162.7412.
2002-2003 109.45 94.8713.
2003-2004 75.87 65.1614.
2004-2005 185.55 163.9615.
2005-2006 383.91 399.22

பில்லிகுண்டுலுவிலிருந்து வந்ததாகக் கூறப்பட்ட தண்ணீர் மேட்டூரில் அளந்து பார்த்த போது குறைந்ததே தவிர கூடவில்லை. அதிகபட்சமாக 27.20 ஆ.மி.க. அளவிற்கு(2001-02) குறைந்துள்ளது. 2005-2006ஆம் ஆண்டில் வரலாறு காணாத பெருமழைப் பெய்ததால் அவ்வாண்டில் மட்டும் 15.31 ஆ.மி.க. பிலிகுண்டுலுவை விட மேட்டூருக்கு அதிகமக வந்துள்ளது. ஏனைய 14 ஆண்டுகளும் பில்லிகுண்டுலுவில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு மேட்டூரில் அளக்கும் போது குறைவாகவே வந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு நடுவர் மன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களின் சாரம். மேற்கூறிய காரணங்களை அடுக்கிவிட்டு, கர்நாடகம் தரும் நீரை பில்லிகுண்டுலுவில் அளக்;கக்கூடாது, மேட்டூரில் தான் அளக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதிட்;டது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கர்நாடகம் தரும் நீரைப் பில்லிகுண்டுலுவிலிருந்து அளப்பது நமக்கு சாதகமானது@ கூடுதலாக 25 ஆ.மி.க. கிடைக்கும் என்று கூப்பாடு போடுகிறார். ஏன் இந்தக் குட்டிக்கரணம்? ஏனிந்த முரண்பாடு? காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை முதலிலேயே கருணாநிதி கவனிக்கவில்லையா? இப்படியொரு முதலமைச்சர் இருந்தால் அந்த மாநில மக்களின் உரிமைகள் என்னவாகும்? உண்மைக்கு மாறாக கருணாநிதி கூறும் கூடுதல் 25 ஆ.மி.கவை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டு பார்ப்போம். அப்பொழுதும் அவர் கணக்கு தப்புக் கணக்கு தான்!

காவிரி நீரில் தமிழகப் பங்கு 419 ஆ.மி.க. இதில் கர்நாடகம் தரவேண்டிய 192ஆ.மி.க. போக, மீதியுள்ள 227 ஆ.மி.க தண்ணீர் தமிழகத்திற்குள் கிடைக்கும் நீர். பில்லிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் வரை கலைஞர் கணக்குப்படி கிடைக்கும் 25 ஆ.மி .க நீர, தமிழ்நாட்டின் பங்கான 227 ஆ.மி.கவுக்குள் அடக்கம் தானே! அது எப்படி கூடுதலான நீர் ஆகும்! அது தமிழக பங்கிற்குள் வராதென்றால் 419ஆ.மி.க உடன் 25ஆ.மிகவை சேர்த்து தமிழகத்திற்கு 444 ஆ.மி.க என்று சொல்ல வேண்டியது தானே? கலைஞர் குழம்பவில்லை. தமிழர்களைக் குழப்பப் படாதபாடுபடுகிறார்.

'பட்டு வேட்டி பற்றி கனா கண்டு கொண்டிருந்தபோது கட்டியிருந்த கோவணத்துணியும் களவாட பட்டது" போல் பவானியிலிருந்து 6ஆ.மி.கவும் அமராவதியிலிருந்து 3 ஆ.மி.கவும் கேரளத்திற்குத் தமிழகம் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளத்தின் பாசனத் தேவைக்காக இது ஒதுக்கப்படுகிறதா?அதெல்லாம் மலைப்பகுதி. அங்கு நீர் பாசனச் சாகுபடி கிடையாது. கேரள அரசு, கோக்-பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்கக் கூட கேட்டிருக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஆனைகட்டி அருகே முக்காலியில் பவானியின் குறுக்கே கேரள அரசு அணைகட்ட முனைந்ததையும் தமிழகம் எதிர்த்ததையும் இப்பொழுது நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது முக்காலியில் கோக் நிறுவனத்திறகு தண்ணீர் தர கேரள அரசு திட்டமிட்டது என்று பேசப்பட்டது.

இனி அதே முக்காலியில் இருந்து கேரளம் பவானியின் குறுக்கே அணைக் கட்டலாம். அப்படி அணைக் கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட பவானியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்காது. தமிழக நீலகிரி மலையில் உற்பத்தியாகி சிறிது தொலைவு கேரள எல்லையில் ஓடி மீண்டும் தமிழகத்திற்குள் நுழைந்து விடுகிறது பவானி. இதற்கு ஆபத்து வந்துள்ளது. ஆக, 9 ஆ.மி.கவை பவானி, அமராவதி நீரில் இழந்துள்ளோம். இதையெல்லாம் கழித்தால் கர்சாடகத்திலிருந்து தமிழகத்திற்கு எவ்வளவு நிகர நீர் தீர்ப்பின்படி கிடைக்கும்.

ஒதுக்கீடு - 192 ஆ.மி.க
சுற்றுச்சூழலுக்காக பிடித்தம் - 10 ஆ.மி.க
கடலில் கலப்பதன் பெயரில் பிடித்தம் - 4 ஆ.மி.க
புதுவைக்கு - 7 ஆ.மி.க
கேரளத்திற்கு - 9 ஆ.மி.க
-----------------------------------
30 ஆ.மி.க 162ஆ.மி.க
-----------------------------------
மிச்சம் 162ஆ.மி.க தண்ணீர் தான்.
இதில் தான் 'ஞாயம்" காண்கிறார் கலைஞர் கருணாநிதி. சாதகம் என்கிறார். ஆறுதல் என்கிறார்.

சாகுபடி நிலப்பரப்பில் கர்நாடகத்திற்குப்பாதகம் நேர்ந்து விட்டதாகவும், தமிழ்நாட்டிற்குச் சாதகம் கிடைத்துவிட்டதாகவும் முதலமைச்சர் கூறுகிறார். 'நடுவர் மன்றத்தில் நாம் வாதாடும் போது தமிழகத்துக்குப் பாசனப்பரப்பு 29.26 லட்சம் ஏக்கர் என்று கேட்டோம். நடுவர் மன்றம் அனுமதித்திருப்பது 24.7 லட்சம் ஏக்கர். இதில் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கர்நாடக மாநிலத்துக்குப் பாசனத்துக்காக அவர்கள் கோரியது 27.28 லட்சம் ஏக்கர். நடுவர் மன்றம் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது 18.85 லட்சம் ஏக்கர். இதை நான் சொல்வதற்குக் காரணம் நாம் ஒன்றும் நஷ்டப்பட்டு விடவில்லை. நாம் கேட்டதில் கொஞ்சம் குறைவாகக் கிடைத்தது. ஆனால் கர்நாடகம் கேட்டதில் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்று ஒரு ஒப்பீட்டுக்காக இதைச் சொன்னேன்.

நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் கர்நாடகம் 11.2 லட்சம் ஏக்கர் அளவுக்கு மேல் பாசனவசதியைப் பெருக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இறுதித் தீர்ப்பில் 18.85 லட்சம் ஏக்கர் அளவுக்கு உயர்த்தியுள்ளது. வேறொரு விவரத்தை ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இறுதித் தீர்ப்பில் உள்ள ஒரு விவரத்தை இடைக்காலத் தீர்ப்பில் உள்ள விவரத்தோடு ஒப்பீட்டு, எனது கருத்து ஆச்சரியமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இடைக்காலத் தீர்ப்பில் எவ்வளவு அனுமதிக்கப்பட்டது, இப்பொழுது எவ்வளவு கிடைக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது" - முதல்வர் கருணாநிதி, தினமணி 26-02-2007.

1968லிருந்து காவிரிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு வந்ததாக மூச்சுக்கு மூச்சு பெருமையடித்துக் கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர் கலந்து கொண்ட பேச்சுக்கிளில் உருவான கருத்தொருமைபாடுகள், கண்டறியப்பட்ட புள்ளி விவரங்கள் போலும். எதிர்க்கட்சியினரை மடக்க பழைய செய்தித்தாள்களில் இருந்து மேற்கோள் காட்டும் பழக்கமுள்ள இவருக்கு தமிழினத்தின் உரிமை காப்பதில் மட்டும் பழையதெல்லாம் மறந்து விடுமா?

1972 மே மாதம் அப்போதைய கர்நாடக முதல்வருடன் அப்போதைய தமிழக முதல்வர் பேச்சுவார்த்தையில் இருவரும் ஒப்புக் கொண்ட செய்தி, புதிய உடன்பாடு வரும் வரைக்கும் 1972 மே மாதம் பயன்படுத்திய தண்ணீருக்கு மேல் எந்த மாநிலமும் கூடுதராக நீரை பயன்படுத்தக் கூடாது. கர்நாடகம் 11லட்சம் ஏக்கருக்கு மெல் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்பதாகும்.

1972ல் கர்நாடகத்திடம் 11லட்சம் ஏக்கருக்கு ஆயக்கட்டு(பாசன நிலப்பரப்பு) கிடையாது. அம்மாநிலம் எதிர்பார்க்கும் திட்டங்களையும் சேர்த்துச் சொல்லப்பட்டது தான் 11 லட்சம் ஏக்கர்.

இதை உறுதி செய்து கொள்ள, இந்திய அரசின் உண்மை அறியும் குழு எடுத்த விவரத்தைக் காணலாம். அதன்படி 1971ல் கர்நாடகத்தில் காவிரிப் பாசனப்பரப்பு - 4.42லட்சம் ஏக்கர் மட்டுமே. 1971ல் தமிழகத்தின் பாசனப்பரப்பு 25.30 லட்சம் ஏக்கர்.

நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய போது (1991-ஜுன் 25) மேற்கண்ட 1972 - முதலமைச்சர்கள் உடன்;பாட்டை கருத்தில் கொண்டு இறுதித் தீர்ப்பு வரும் வரை 11லட்சம் ஏக்கருக்கு மேல் கர்நாடகம் பாசனப்பரப்பை விரிவு படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. தமிழ்நாட்டிற்கு அவ்வாறு நிபந்தனை விதிக்க வேண்டிய தேவையே எழவில்லை. ஏனெனில் அது கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறும் நிலையில் உள்ளது. பழைய பாசனப்பரப்பை பாதுகாத்தால் போதும் என்ற பரிதாப நிலையில் இருக்கிறது. கர்நாடகமோ காவிரித் துணை ஆறுகளில் புதிய புதிய அணைகள் கட்டி, தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து வந்தது. புதிய பாசனப்பரப்பிற்கான கோரிக்கையே தமிழகத்தரப்பிலிருந்து இல்லை.

1987-இல் தமிழகப் பொதுப்பணித் துறை தயாரித்த ஆவணத்தில், 1986-இல் தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப் பாசனப்பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்று முடிவு செய்யப்பட்டது. இப்பொழுது நடுவர் மன்றம்; அனுமதித்துள்ளது தமிழகத்திற்கு 24.7 லட்சம் ஏக்கர் மட்டுமே. 1986-இல் இருந்ததற்கு 1.1 லட்சம் ஏக்கர் குறைவு. நடுவர் மன்றத்தில் தமிழக அரசு கேட்டது 29.26 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பு. 5 லட்சம் ஏக்கர் குறைவாக இறுதித் தீர்ப்பு வந்;துள்ளது. 'இதில் பெரிய வித்தியாசமில்லை" என்கிறார் முதலமைச்சர். 5 லட்சம் ஏக்கர் வித்தியாசம் சிறிய வித்தியாசமா? கீழ் பவானி அணையில் மொத்தப் பாசனப்பரப்பு 2.07 லட்சம் ஏக்கர். இதைவிட 1½ மடங்கு கூடுதல் 5 லட்சம் ஏக்கர் என்பது. முல்லை பெரியாறு அணையின் மொத்த பாசனப்பரப்பு 2.20 லட்சம் ஏக்கர். கீழ்பவானி, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த பாசனப்பரப்பைவிட கூடுதலாக உள்ள 5 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பை நடுவர் மன்றம் ஏற்க மறுத்துவிட்டது. கணக்கில் எடுக்கத் தேவையில்லாத மிக சிறு நிலப்பரப்புப் போல் 5 லட்சம் ஏக்கரை அலட்சியப்படுத்துகிறார் கலைஞர் கருணாநிதி.

மாறாக, கர்நாடகம் கற்பனையாக கேட்ட நிலப்பரப்பான 27.28 லட்சம் ஏக்கரை ஏற்காமல் சுமார் 9 லட்சம் ஏக்கர் குறைத்து, 18.85 லட்சம் ஏக்கர் தான் நடுவர் மன்றம் வழங்கியுள்ளது என்றும் 'கொஞ்சம் அதிகமாகக் குறைத்துவிட்டது" என்றும் சமாதானம் சொல்கிறார்.

உண்மையில் இறுதித் தீர்ப்பு கர்நாடக பாசனப்பரப்பிற்கு இருந்த உச்ச வரம்பை நீக்கி விட்டது. தீர்ப்பின் பிரிவு ஓஏஐஐஐ இதை உறுதி செய்கிறது. நடுவர் மன்றம் கருத்துகளாக வரிசைப் படுத்திய சில வாதங்களையெல்லாம் தீர்ப்பு போல் வர்ணிக்கிறார் கலைஞர்.

உயரதிகாரம் படைத்த ஒரு நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் நமது அரசு முன் வைத்த வாதங்களையெல்லாம் மறுக்கும் அல்லது புறக்கணிக்கும் ஒரு முதலமைச்சர் உலகத்திலேயே கலைஞர் கருணாநிதியாகத் தான் இருப்பார். பதவிக்கு தமிழ்நாடு, வணிகத்திற்கு இந்தியா என அவர் தேவைகள் இடத்திற்கு இடம் மாறுபடக்கூடும்.

காவிரியில் தமிழகத்திற்குள்ள உரிமையை வலியுறுத்தினால் - அதற்காக போராடினால் கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் கன்னடர்களே வாழவில்லையா? கர்நாடகத் தமிழர்களுக்கு ஆபத்து வந்தால் தமிழகக் கன்னடர்களுக்கு ஆபத்து வரும்.

கர்நாடகத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் அன்பும் இவர்களுக்குக் கிடையாது. தங்கள் துரோகத்தை மறைக்க அதை ஓரு சாக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழினத் தலைவர் காவிரியில் தமிழர்க்கு இழைக்கும் துரோகம் செயலலிதாவுக்கு வசதியாக போய்விட்டது. இந்த அம்மையார் போராடவில்லையே என்பது உருத்தலாக தெரியாது. அம்மையாரின் ஊழல் வழக்கு கர்நாடகத்தில் நடக்கிறது. மற்ற பல கட்சிகள் இந்த இரு கழகங்களோடு உடன்கட்டை ஏற்காதிருப்பவை போல், அமைந்திருக்கின்றன.
தமிழ் இனம் அரசியல் தலைமையற்று இருக்கும் அவலத்தை புரிந்து கொண்ட கன்னட வெறியாளர்கள் 9-02-2007லிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஓசூருக்குள் புகுந்து, காவிரியும் கன்னடருக்கே, ஓசூரும் கன்னடர்க்கே என்று கூச்சலிட்டுச் சென்றனர். தமிழகக் காவல்துறை அவர்களை கைது செய்யவில்லை. சமாதானம் சொல்லி அனுப்பியது. தமிழ்நாட்டிலிருந்து பரிக்கப்பட்ட தமிழ்நாட்டோடு சேர வேண்டிய கொள்ளேகாலம், கோலார் தங்க வயல், பெங்களுரு, போன்ற பகுதிகளை தமிழர்கள் கேட்காமல் இருப்பதால் ஓசூரைக் கேட்கும் துணிச்சல் கன்னடர்களுக்கு வந்துள்ளது. காவிரித் தீர்ப்பை எதிர்த்து கன்னடர்கள் நடத்திய போராட்டங்கள், வெறியாட்டங்கள் அனைத்தையும் ஜனநாயக வழிப்பட்டவை என்று கூறி கர்நாடக முதல்வர் குமாரசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூட்டிய அனைத்துக்கட்சி அப்போராட்டங்களுக்குப் பாராட்டும் நன்றியும் கூறியுள்ளது.

தமிழகத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழ்த் தேசிய முன்னணியும் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து போராடிய போது பாய்ந்து பாய்ந்து கைது செய்தனர் காவல்துறையினர். திருச்செந்தூர் குறும்பூரில் தீர்ப்பு நகலை எரித்த த.தே.பொ.க, தமிழக உழவர் முன்னணி மேதாழர்கள் 16 பேரை பிணையில் வர முடியாத பிரிவைச் சேர்த்து திருவைகுண்டம் சிறையில் அடைத்துள்ளது. கர்நாடகத்தில் தீர்ப்பு நகலை மட்டுமல்ல, மூன்று நீதிபதிகளின் கொடும்பாவிகளையே கொளுத்தினார்கள். தொலைக்காட்சிகளில் பார்த்தோம்@ அவர்களை சிறையில் அடைக்கவில்லை. காவிரியில் நடுவர் மன்றம் தந்த மோசமானத் தீர்ப்பை எதிர்த்துத் தீர்ப்பு வந்த மறுநாளும்(6-02-2007) அடுத்த நாளும் த.தே.பொ.க, தமிழ்த் தேசிய முன்னணி அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. பா.ம.க, ம.தி.முக கட்சிகளும் தீர்ப்பையும், தமிழக முதல்வரின் நிலைப்பாடம்டையும் விமர்சித்தனர். ம.தி.மு.க பட்டினிப் போராட்டத்தை நடத்தின. தினமலர், தினமணி ஏடுகள் தீர்ப்பை விமர்சித்து செய்திகளும் கட்டுரைகளும் வெளியிட்டன.

மிகவும் தாமதமாக, மெத்தனமாக 19-2-2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் தமிழக முதல்வர். சில விளக்கங்கள், சில திருத்தங்கள் கோர மறு ஆய்வு மனு நடுவர் மன்றத்தில் போடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுஆய்வு மனுவெல்லாம் பயன் தராது நடுவர் மன்றம் திட்டமிட்டு, ஏமாற்றிவிட்டதை அதன் தன் முரண்பாட்டை, ஒரு சார்புத் தன்மையை எடுத்து விளக்கி, இவற்றால் 6½ கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதகங்களை சுட்டிக்காட்டி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர வெண்டும்.
புதிய நடுவர் மன்றம் நியமித்திட ஆணையிட்டு, அது ஓர் ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்கிட கால வரம்பிடக் கோர வேண்டும். அதுவரை ஏற்கனவே செயலில் உள்ள( ளுவயவரள பரயசயவெநந) நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் படி 205 ஆ.மி.க தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு தரவும் ஆணையிட வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 131 மற்றும் வௌ;வேறு உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் துணை கொண்டு வழக்கை தமிழக அரசு தொடுக்க வேண்டும்.